உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

து சிறப்புடைக் கலித்தளை தட்டு, எண்சீர்ச் சிறப்புடைக் கழிநெடில் அடியான் வந்த ஆசிரிய நிலை விருத்தம்.

யாகு

ஒன்பதின் சீராலும் பதின்சீராலும் ஆகிய இடையாகு கழிநெடில் அடியாலும், பதினொருசீர் முதலாகிய கடை கழி நெடில் அடியாலும் வந்த ஆசிரிய நிலை விருத்தம் அடி யோத்தினுட் கண்டுகொள்க.

இனி, ஆசிரிய மண்டில விருத்தம் வருமாறு;

(அறுசீர் அடிமறி மண்டில ஆசிரிய விருத்தம்) “செங்கயலும் கருவிளையும் செருவேலும் பொருகணையும்

பங்கயமும் இலவலரும் பனிமுருக்கும் பவழமுமே

'செயிர்க்கும் நாட்டம்;

பழிக்கும் *செவ்வாய்;

பொங்கரவின் இரும்படமும் புனைதேரும் பொலிவழிக்கும்

புடைவீங் கல்குல்;

கொங்கிவரும் கருங்கூந்தற் கொடியிடையாள் வனமுலையும்

கூற்றம் கூற்றம்

இஃது அறுசீர்க் கழிநெடில் அடியான் அடிமறியாய்க் கூறப் படுதலால், அடிமறி மண்டில ஆசிரிய விருத்தம்.

(எண்சீர் ஆசிரிய மண்டில விருத்தம்)

“வெறிவிரவு புன்சடைமேல் வெள்ளம் பரக்கும்; விறல்விசயன் ஆகத்து 2வெள்ளம் பரக்கும்; கறைவிரவு நஞ்சுண்டு ’கண்டங் கறுக்கும்;

கழலடைந்தார் தீவினையைக் ’கண்டங் கறுக்கும்; பொறிவிரவு பூண்முலையாள் 4போகத்த னாகும்; பொதுநீக்கித் தன்னடைந்தார் 4போகத்த னாகும்; நெறிவிரவு காஞ்சி நெறிக்காரைக் காட்டான்; நிழலடைந்தார் தம்மை 'நெறிக்காரைக் காட்டான்

எனவும்,

6

5

“நிலங்கா ரணமாக நீர்க்கங்கை ஏற்றான்;

நீண்டதா ளாலங்கோர் நீர்க்கங்கை ஏற்றான்;

1. பகைக்கும். 2. வெள்ளம் பரக்கும் - நீர் பரவும்; வெள் அம்பு அரக்கும் - ஒளிமிக்க அம்பை அழுத்தும். 3. கண்டம் கறுக்கும் - கழுத்து கறுத்திருக்கும். கண்டு அங்கு அறுக்கும். 4. போகத்தன் ஆகும்; நுகர்பவனாவான். போக அத்தன் ஆகும். போமாறு நிலைத்தவன் ஆவான். 5. காஞ்சித் திருநெறிக்காரைக் காட்டில் கோயில் கொண்டான். (காரைவனம் உளதாகலின் இப்பெயர்) மீண்டும் பிறப்பித்துக் கல்லும் முள்ளும் காட்டான். 6. நீர்க்கு அம்கை ஏற்றான் (மாவலியிடம்) நீர்க் கங்கை ஏற்றான். (பா. வே) *செவ்வேலும். *பாதம்.