உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

311

என்றும், அடிமறியாகாது நிற்பனவற்றை ஆசிரிய நிலை விருத்தம் என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் எனக் கொள்க.

வரலாறு:

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

“விடஞ்சூழ் அரவின் இடைநுடங்க விறல்வாள் வீசி விரையார்வேங் கடஞ்சூழ் நாடன் காளிங்கன் கதிர்வேல் பாடும் 'மாதங்கி *மடஞ்சேர் நோக்கம் மா தாந்தாம் வடிக்கண் நீல மலர்தாந்தாம் தடந்தோள் இரண்டும் வேய்தாந்தாம் என்னும் தன்கைத்

3தண்ணுமையே. யா. கா. 29. மேற்.

ஃது அறுசீர்ச் சிறப்புடைக் கழிநெடிலடியான் வந்த ஆசிரிய

விருத்தம்.

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

"படையொன்றும் இல்லை அணியில்லை சுற்ற

மதுவில்லை பற்றும் இனியொன்

றடைகின்ற தில்லை அமிழ்துண்ப தில்லை

அறிவொன்றும் எண்ணி அறியார்

புடைநின்று 'நான்ற மணிமாலை போத

நிலவீசு மாகம் உறநீள்

5குடையொன்ற தொன்றும் அதன்மேல தொன்றும் உடையார்க்கி தென்ன குணனே

து எழுசீர்ச் சிறப்புடைக் கழிநெடில் அடியான் வந்த ஆசிரிய நிலை விருத்தம்.

1.

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

“அருகிவரும் கிளிமொழியால் அமிழ்தம் தோற்றி

அகன்பொழில்வாய் உனைப்பரவி அடைந்த மாந்தர்

கருதியதே கொடுத்துயர்ந்த காட்சி நோக்கிக்

கற்பகத்தோ டொப்புரைப்பர் சிலவர் ; அல்லார்

வருதளிரின் நறுமேனி மயிலஞ் சாயல்

வாணுதலாட் கரிதில்லை யதற்க ணுண்டென் றொருதலையாய் ஒவ்வாமை உரைப்பர் யானோ

  • ஒளியியக்கி இருதிறமும் உடன்பட் டேனே

ஆடல் பாடல்களில் தேர்ந்தவள். 2. தண்ணுமையின் ஒலிக்குறிப்பு. 3. ஒரு தோற்கருவி. 4. தொங்கிய. 5. முக்குடையுடையார்.

(பா. வே) *வடஞ்சேர் கொங்கை மலைதாந்தாம். *ஒளியியக்க.