உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

"அகப்பா அகவல்,

ஐயீ ருறுப்பின் ஆசிரி யம்மே”

66

அவைதாம்,

முன்னும் பின்னும் தூங்கல் இன்றிச்

சென்னெறி மருங்கிற் சென்றிசைக் கும்மே"

என்றாராகலின்.

புறப்பா அகவலாவன, 'பாடாண்டுறை மேற்பாடும் ஆசிரியம் எனக் கொள்க. என்னை?

66

‘புறப்பா அகவல் பொருந்தக் கூறிற்

பாடாண் பகுதி நாடுங் காலை'

என்றார் ஆகலின்.

நூற்பா அகவலான, விழுமிய பொருளைத் தழுவிய சூத்திரயாப்பினவாய் வருவன என்னை?

66

நூற்பா அகவல் நுணங்க நாடின்

சூத்திரம் *குறித்த யாப்பின வாகி

இசைவரம் பின்றி *விழுமிதின் நடக்கும்” என்றாராகலின்.

சித்திர அகவலாவன, சீர்தொறும் அகவி வருவன. என்னை?

“சித்திர அகவல்,

சீர்தொறும் அகவும் சித்திரம் உடைத்தே"

என்றாராகலின்.

உறுப்பின்

அகவலாவன, ஒரு

பொருண்மேற் பரந்

திசைப்பன. என்னை?

“உறுப்பின் அகவல் ஒருபொருள் நுதலி இசைபரந் தியலும் இயற்கைத் தென்ப”

என்றாராகலின்.

ஏந்திசை அகவலாவன, எழுத்திறந்து இசைப்பன. என்னை? “ஏந்திசை அகவல் எழுத்திறந் திசைக்கும்

பாங்கறிந் துணர்ந்தோர் பகருங் காலை

என்றாராகலின்.

அல்லதூஉம், ‘அஃது' என விகற்பித்த அதனால், அடிமறியாய் வருவனவற்றை ஆசிரிய மண்டிலம் விருத்தம்

1. “ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்

அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று” (பா. வே) *வகுத்த. *விழுமியது பயக்கும்.

பு.வே. 189.