உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஎ.

யாப்பருங்கலம்

ஆசிரிய விருத்தம்

கழிநெடில் அடிநான் கொத்திறின் விருத்தமஃ

தழியா மரபின் அகவல் ஆகும்.

309

ஃது என் நுதலிற்றோ?' எனின், ஆசிரிய விருத்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) கழிநெடில் அடி நான்காய்த் தம்முள் அளவொத்து முடியின், அஃது ஆசிரிய விருத்தமாம் என்றவாறு.

‘அழியா மரபினது அகவல்’ என்ற ஆசிரியப்பாவினைச் சிறப்பித்துச் சொல்ல வேண்டியது என்னை?

ஒருசார் ஆசிரியர், 'அகப்பா அகவல், புறப்பா அகவல், நூற்பா அகவல், சித்திர அகவல், உறுப்பின் அகவல், ஏந்திசை அகவல் என்று ஆறு'விகற்பிற்று அகவல் ஓசை,' என்பர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. என்னை?

66

அகவல் ஆறும் வெண்பா மூன்றும் பண்புறத் தெரியும் பகுதிய ; மற்றது நன்றறி புலவர் நாட்டினர் என்ப

எனவும்,

66

'ஆறு வகையின் அகவலொடு கொள்ளாது வேறுபட வரினது வெண்பா ஆகும்”

எனவும்,

66

அவைதாம்,

அகப்பா அகவல், புறப்பா அகவல்,

நூற்பா அகவல், சித்திர அகவல்

உறுப்பின் அகவல், ஏந்திசை அகவலென்

றவ்வா றென்ப அறிந்திசி னோரே

எனவும் சொன்னாராகலின்.

அவற்றுள் அகப்பா அகவலாவன, அகப்பொருளைத் தழுவி, 2ஐயீருறுப்பினவாய், வஞ்சி விரவாது வந்து முடியும் ஆசிரியப்பா எல்லாம் எனக் கொள்க. என்னை?

1.

பாகுபாடுடையது.

2. ஐயீருறுப்பின – பத்து உறுப்பின.

'திணையே கைகோள் கூற்றே கேட்போர், இடனே காலம் பயனே முன்னம்,

மெய்ப்பா டெச்சம் பொருள்வகை துறையென், றப்பா லாறிரண் டகப்பாட் டுறுப்பே"

- நம்பி. அ. பொ. ஒழிபியல்.. 2.

இனி, இயல்பகத்திணை, வகையகத்திணை, பொதுவகைத்திணை, சிறப்பகத்திணை, உபமஅகத்திணை, புறநிலையகத்திணை, எதிர்நிலையகத்திணை, கருவியகத்திணை, காரியவகத்திணை, காரகவகத்திணை, முன்னவை யகத்திணை, பின்னவையகத்திணை என்பாரும் உளர். பத்து உறுப்பினவாகவும் இருந்தனபோலும்.

J