உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

வரலாறு:

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

"வண்டுளர் பூந்தார்' (யா. வி. பக். 306) எனவும், 'இரங்கு குயின் முழவா' (யா. வி. பக். 307) எனவும் இவை அடி மடக்கு. 'கண்ணியோர் கண்ணி' (யா. வி. பக். 306) என்பது சீர்

மடக்கு.

766

(ஆசிரிய நேர்த்துறை)

“முத்தரும்பிப் பைம்பொன் மலர்ந்து முருகுயிர்த்துத் தொத்தலரும் கானற் றுறையேம்

துறைவழி வந்தெனது தொன்னலனும் நாணு நிறைவளையும் வௌவி நினையானச் 'சேர்ப்பன்'

இஃது 3

L

து அசை இடை மடக்கு.

பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. என்னை? “அடித்தொகை நான்குபெற் றந்தத் தொடைமேற் கிடப்பது நாற்சீர்க் கிழமைய தாகி

66

எடுத்துரை பெற்ற இருநெடில் ஈற்றின்

அடிப்பெறின் ஆசிரி யத்துறை ஆகும்”

‘அளவடி ஐஞ்சீர் நெடிலடி தம்முள்

உறழத் தோன்றி ஒத்த தொடையாய் விளைவது அப்பெயர் வேண்டப் படுமே”

என்றார் காக்கைபாடினியார்.

“எண்சீர் அடியீற் றயலடி குறைநவும் ஐஞ்சீர் அடியினும் பிறவினும் இடையொன்ற அந்தத் தொடையாய் அடிநான் காகி உறழக் குறைநவும் துறையெனப் படுமே என்றார் மயேச்சுரர்.

""

"நாற்சீர் அடிநான் கந்தத்தொடை நடந்தவும் ஐஞ்சீர் அடிநடந் துறழவடி குறைந்தவும் அறுசீர் எழுசீர் அவ்வியல் நடந்தவும் எண்சீர் நாலடி *யீற்றயல் குறைந்தும் தன்சீர்ப் பாதியின் அடிமுடி வுடைத்தாய் அந்தத் *தொடையின் அவ்வடி நடப்பிற் குறையா உறுப்பினது துறையெனப் படுமே

என்றார் அவிநயனார்.

1. இஃது ஈரடி ஓரெதுகைச் செய்யுள். 2. கடற்கரைத் தலைவன். 3. துறை என்னும் நிரையசை. (பா. வே) *ஈற்றடி. *தொடையிவை அடியா.