உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

யாப்பருங்கலம்

எனவும் இவை யிடை வை யிடையிடை குறைந்து

307

டை மடக்காய்,

நான்கடியாய் வந்த ஆசிரிய இணைக்குறட்டுறை.

(ஆசிரிய நேர்த்துறை)

“வரிகொள் அரவும் மதியும் சுழலக்

கரிகால் ஏந்தி ஆடுமே;

கரிகால் ஏந்தி ஆடு மிறைவன்,

புரிபுன் சடைமேற் புனலும் பிறழ்வே'

இது முதல் அயலடி ஒரு சீர் குறைந்து, ஏனை மூன்றும் நாற்சீர் அடியாய், இடை மடக்காய் வந்த ஆசிரிய நேர்த்துறை.

(ஆசிரிய இணைக்குறட்டுறை)

““பாடகஞ்சேர் காலொருபாற் பைம்பொற் கனைகழற்கால்

ஒருபால் தோன்றும்;

நீடு குழலொருபால் நீண்ட சடையொருபால்

வீடிய மானின் அதளொருபால் மேகலைசேர்ந்

தாடும் துகிலொருபால் அவ்வுருவம் 2ஆண்பெண்ணென்

றறிவார் யாரோ?’

து நடு இரு சீர் குறைந்து, ஏனையடி இரண்டும் ஆறு சீரான் வந்த ஆசிரிய இணைக்குறட்டுறை.

(ஆசிரியத்துறை)

3"கோடல் விண்டு 'கோபம் ஊர்ந்த கொல்லைவாய் மாடு நின்ற கொன்றை ஏறி மௌவல் பூத்த பாங்கெலாம்

5

ஆடல் மஞ்ஞை அன்ன சாயல் அஞ்சொல் வஞ்சி மாதராய் !

6

வாடல் ; மைந்தர் தேரும் வந்து தோன்றுமே”

இது நடு ஈரடியும் மிக்கு வந்த ஆசிரியத்துறை.

பிறவும் வந்தவழிக் காண்க.

மடக்கு மூவகை : அடி மடக்கும், சீர் மடக்கும், அசை மடக்கும் என. என்னை?

66

"இரண்டாம் அடியை இனிதின் மடக்கலும்,

இரண்டாம் அடியின் இறுதிச்சீர் மடக்கலும், இரண்டாம் அடியின் ஈற்றசை மடக்கலும் இவ்வா றென்ப மடக்குதல் தானே

என்றாராகலின்.

1.

மாதர் காலணி. 2. அம்மை அப்பன் வடிவு. 3. வெண்காந்தள். 4. இந்திரகோபம் (தம்பலப்பூச்சி). 5. வாட்டமுறாதே. 6. தலைவர்.