உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

315

என்றாலும், சார்ச்சியால், 'அவை' என்பது பெறலாம்; 'மற்றவை’ என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

ஏந்திசைத் துள்ளலும், அகவற்றுள்ளலும், பிரிந் திசைத் துள்ளலும் என மூன்று வகைப்படும் துள்ளல் ஓசை,' என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

'வெள்ளையும் அகவலுமாய்' என்பதனை, 'வெண்பாவும் ஆசிரியப்பாவுமாய் விராயும், ஆசிரியப்பாவும் வெண்பாவுமாய் விராயும்' என்று கொள்ளாமோ?' எனின், கொள்ளாம். என்னை? பிற நூலுள் இவ்வாறு சொல்லிற்றிலர் ஆகலானும், 'பிறநூல் முடிந்தது தானுடம் படுதல்,' (நன். 14) என்பவாகலானும், ‘பல் பொருட் கேற்பின் நல்லது கோடல்,' (தொல். பொ. 665) என்பது தந்திர உத்தி ஆகலானும், 'வெண்பாவாயும் இறும்; ஆசிரிய மாயும் இறும், என்று வேறு வேறே கூட்டித் தீபகப் பொருளாகக் கொள்ளப்படும்.

'வெள்ளையும் அகவலுமாய் இறும்' என்னாது, ‘விளைந்து இறும்,' என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

ஒருசார்க் கொச்சகக் கலிப்பாக்கள் கலியடியானே இறுவனவும் உள என்பதூஉம், ஆசிரிய நேர்த்தளையாற் கலிப்பா மிக்கு வாரா என்பதூஉம் அறிவித்தற்கு வேண்டப் பட்டது; ‘விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்,' என்ப வாகலின்.

அம்மூன்று ஓசையானும் செய்யுள் வருமாறு:

(தரவு கொச்சகம்)

“முருகவிழ்தா மரைமலர்மேல் முடியிமையோர் புடைவரவே வருசினனார் அருமறை நூல் வழிபிழையா மன முடையார் இருவினைபோய் விழமுறியா? எதிரியகா தியையெறியா நிருமலராய் அருவினராய் நிலவுவர்சோ தியினிடையே”

இஃது 3ஏந்திசைத் துள்ளலோசை.

யா. கா. 11. 21. மேற்.

"செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்த் தொளித்ததே

4(சூளாமணிப்பாடலென்பர்)

1. அருகபரன். 2. தடையாய் உள்ள வினைகள். அவற்றை ஞான வாணீயம், தரிசன வாணீயம், போகநீயம், அந்தராயம் என்பர். 3. அனைத்தும் கலித்தளையாய் வந்தமையின் ஏந்திசைத்துள்ளலாயிற்று. 4. தக்கயாகப்பரணி குறிப்பு.