உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இஃது 'அகவற் றுள்ளல் ஓசை.

"மணிகிளர் நெடுமுடி வானவனும் தம்முனும்போன் றணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால் நுரைநிவந் தவையன்ன நொப்பறைய சிறையன்னம் இரைநயந் திறைகூரும் ஏமஞ்சார் துறைவ கேள்’

இது 2பிரிந்திசைத் துள்ளல் ஓசை.

(கலித்தாழிசை)

- யா. வி. 86. மேற்.

“முற்றொட்டு மறவினையை முறைமையான் முயலாதார் சொற்றொட்ட வாய்மையாற் சோர்வுமங் குளதாமோ?

“தொன்மைக்கண் வினைசெய்யார் *துப்புரவின் இரங்குவார் பன்மைக்கண் உள்ளந்தேர் பயமின்றிக் கழிவாரே?

“செல்வதூஉம் வருவதூஉம் சிறந்தாங்குத் *தமக்கறிந்து

நல்லறமே புரிவதூஉம் நல்லார்கள் கடனன்றே?'

இன்னவை பிறவும் பிரிந்திசைத் துள்ளல் ஓசையால் வந்தன எனக் கொள்க.

சுரிதகத்தால் இறுமாறு, இனிக் காட்டும் கலிப்பாவினுள் கண்டு கொள்க.

66

வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி

எடுத்துயர் துள்ளல் இசையன வாகல்

கலிச்சொற் பொருளெனக் கண்டிசி னோரே”

என்றார் காக்கைபாடினியார்.

66

“ஆய்ந்த உறுப்பின் அகவுதல் இன்றி ஏந்திய துள்ளல் இசையது கலியே’

என்றார் அவிநயனார்.

“சீரிற் கிளர்ந்த தன்றளை தழுவி நேரீற் றியற்சீர் சேரா தாகி துள்ளல் ஓசையிற் றள்ளா தாகி

ஓதப் பட்ட உறுப்புவேறு பலவாய் ஏதம் இல்லன கலியெனப் படுமே’

99

என்றார் நீர் மலிந்த வார் சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர்.

1.

(உரு)

வெண்டளை கலித்தளை ஆகிய இருதளைகளும் வந்துள்ளமையால் அகவல் துள்ளலாம். 2. கலித்தளையும் பிறதளைகளும் பொருந்திவந்துள்ளமையால் பிரிந்திசைத் துள்ளலாயிற்று.

(பா. வே) *துப்புரவிற் கிறங்குவார். *தமக்கெறிந்து.