உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

கலிப்பாவின் வகை

எகூ. ஒத்தா ழிசைக்கலி வெண்கலிப் பாவே

கொச்சகக் கலியொடு கலிமூன் றாகும்.

317

து என் நுதலிற்றோ?' எனின், துள்ளல் ஓசைத்தாய், நேரீற்று இயற் சீரும் நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் வாராது, நிரை முதலாகிய வெண்பா உரிச்சீர் மிக்கு, நேரடித்தாய்த் தன்றளையும் அயற்றளையும் தட்டு வரும் என்றும் ; புற ; நிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்தும் அவையடக்கியலும் செவியறிவுறூஉம் என்னும் பொருண்மேல் வாராது, பதின்மூன் றெழுத்து முதலாக இருபது எழுத்தின்காறும் உயர்ந்த எட்டு நிலமும் பெற்று அளவடி மிகுத்து வரும் கலிப்பாவினது பெயர் வேறுபாடும் அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) ஒத்தாழிசைக் கலியும், கலி வெண்பாவும், கொச்சகக் கலியும் என மூன்று வகைப்படும் கலிப்பா என்றவாறு.

அளவிற்பட்டு ஆழமுடைத்தாகிய பொருளைச் சொல்லு தலானும், ஓதப்பட்ட கலிப்பாவினாலும், பொது இலக்கணத் தோடு ஒத்து ஆழமுடைத்தாய் இசைத்தலானும், ஒத்துத் தாழ்ந்த புகழிற்று ஆகலானும், ஒத்த பொருண்மேல் மூன்றாய்த் தாழ்ந் திசைக்கும் ஒத்தாழிசையைத் தனக்குச் சிறப்புறுப்பாக உடைத்து ஆகலானும், ஒத்தாழிசைக்கலி என்பதூஉம் காரணக்குறி.

கலியாய் வந்து ஈற்றடி முச்சீராய் வெண்பாவே போன்று இறுதலானும், வெண்பாவினிற் சிறிதே வேறுபட்டுக் 'கலித்த ஓசைத்து ஆகலானும், கலிவெண்பா என்பதூஉம் வெண் கலிப்பா என்பதூஉம் காரணக்குறி.

2கொச்சகம் போல மிக்கு குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் கிடக்கும் உறுப்பிற்று ஆகலானும், கலி ஓசைக்குச் சிறப்பில்லாத நேரீற்று இயற்சீரை உட்கொண்டு நிற்றலானும், கொச்சகக் கலிப்பா என்பதூஉம் காரணக்குறி. சிறப்பில்லாததனை ஒரு சாரார் 'கொச்சை' என்றும் 'கொச்சகம்' என்றும் வழங்குவர் எனக் கொள்க.

ஒத்தாழிசைக்கலி, சிறப்புடைத்து ஆகலின், முன்னர் வைக்கப்பட்டது; வெண்கலி, அளவிற்படாத அமைதித்தாய், 1. துன்னிய.

2.

‘பலகோடுபட அடுக்கி உடுக்கும் உடையினைக் கொச்சகம் என்ப; அதுபோலச் சிறியவும் பெரியவும் விராய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் செய்யப்படும் பாட்டதனைக் கொச்சகம் என்றார். இக் காலத்தார் அதனைப் பெண்டிர்க்குரிய உடையுறுப்பாக்கியும் கொய்சகம் என்று சிதைத்தும் வழங்குப. - தொல். பொ. 464. பேரா.

று