உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஈற்றடி முச்சீராகலின், இடைக்கண் வைக்கப்பட்டது; கொச்சகக் கலி, சிறப்பின்மையின், இறுதிக்கண் வைக்கப்பட்டது எனக் கொள்க.

66

'ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சகக் கலியொடு கலிமூன் றாகும்"

என்றார் நற்றத்தனார்.

"வெண்கலி ஒத்தா ழிசைக்கலி கொச்சகம் என்றொரு மூன்றே கலியென மொழிப”

என்றார் காக்கைபாடினியார்.

“கொச்சகம் வெண்கலி ஒத்தா ழிசையென

முத்திற மாகும் கலியின் பகுதி'

என்றார் சங்கயாப்பு உடையார்.

இவர்களும் ஒரு பயன் நோக்கி முறை பிறழ வைத்தார்கள். “ஒத்தா ழிசைக்கலி வெண்கலி கொச்சகமென

முத்திறத் தான்வரும் கலிப்பா என்ப'

என்றார் அவிநயனார்.

66

'ஒத்தா ழிசைக்கலி வெண்கலி கொச்சகம்

முத்திறத் தடங்கும் எல்லாக் கலியும்'

என்றார் பெண்ணொரு பாகன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்.

ஒத்தாழிசைக் கலியின் வகை

அ0. நேரிசை அம்போ தரங்கம்வண் ணகமென்

றோதிய மூன்றே ஒத்தா ழிசைக்கலி.

(உசு)

'இஃது என் நுதலிற்றோ?' எனின், பொதுவகையாற் கலிப்பாவி னைத் தொகுத்தும் வகுத்தும் சொன்னார், விரித்து உணர்த்து வான் எடுத்துக்கொண்டார் ; அவற்றுள் இஃது ஒத்தாழிசைக் கலிப்பாவின் பெயர் வேறுபாடும் எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவும், அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவும், வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவும் என மூன்று வகைப்படும் ஒத்தாழிசை கலிப்பா என்றவாறு.

‘ஓதிய' என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? பொது வகையால் ‘ஒத்தாழிசைக் கலிப்பாவினுள் நேரீற்று இயற்சீர் புகப்பெறாது,' என்று சொல்லப்பட்டது ஆயினும், ‘கலி ஒலி வழுவாது வரும் தரவு தாழிசைகள் உள்ளே வரப்