உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

319

பெறா; வேற்றொலியால் வரும் அம்போதரங்க உறுப்பி னுள்ளும், ஒருசார் அராகத்துள்ளும் வரப்பெறும்,’ என்று மயக்கம் தீர வேண்டப்பட்டது.

‘தரவு, தாழிசை, தனிச்சொல், சுதிதகம்' என்று அளவிற்பட்ட நான்கு உறுப்பினாற் கூறப்படுதலானும், உடன்பட்ட ஒலியிற்று ஆகலானும், நுண் பொருண்மேற் சொல்லப்படுதலானும், மிக்க புகழிற்று ஆகலானும், 1“நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா’ என்பதூஉம் காரணக்குறி.

அழகிற்றாய் ஒழுகித் தரங்கம்பட்ட உறுப்பிற்று ஆகலானும், உயர்ந்து எழுந்து ஒருகாலைக்கு ஒருகால் கலி சார்ந்து சுருங்கித் தரங்கம்பட்ட நீர்த்திரை போலும் உறுப்புக்களே உடைத்தாகலானும், 2‘அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா’ என்பதூஉம் காரணக்குறி.

“அம்போ தரங்கம்' என்பது நீர்த்திரையைச் சொல்லுமோ? எனின், சொல்லும் ; ‘அம்புத் தரங்கம்' என்னும் வட மொழியை ‘அம்போ தரங்கம்' என்று திரித்துச் சொன்னார் ஆகலின்.

தேவரது விழுப்பமும் வேந்தரது புகழும் வண்ணித்து வருதலானும், வாரா நின்ற ஒலியிற்றிரிந்து வேறு ஒரு 3வண்ணத்தாற் சொல்லப்பட்ட முடுகியல் அடி உடைத்தாக லானும் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா’ என்பதூஉம் காரணக்குறி.

4

ஒன்றுக்கு ஒன்று ஒரோ உறுப்பு மிக்கு வருதலின், 'நேரிசை, அம்போ தரங்கம், வண்ணகம்' என்று இம் ம் முறையே வைக்கப்பட்டன.

அக.

வெண்கலி கொச்சகக் கலிகளின் வரையறை வெண்கலி ஒன்றே கொச்சகம் ஐந்தெனப்

பண்பறி புலவர் பாற்படுத் தனரே.

(உஎ)

இஃது என் நுதலிற்றோ?' எனின், வெண்கலிப்பாவினதூஉம், கொச்சகக் கலிப்பாவினதூஉம்

நுதலிற்று.

2.

வரையறை

உணர்த்துதல்

1. 58 ஆம் நூற்பாவின்கண் நேரிசை என்பதற்குக் கூறப்பெற்ற பொருள் விளக்கம் காண்க. கரைசாரக் கரைசார ஒருகாலைக் கொருகாற் சுருங்கி வருநீர்த் தரங்கமேபோல நாற்சீரடியும் முச்சீரடியும் இருசீரடியுமாகிய அசையடிகளைத் தாழிசைக்கும் தனிச் சொற்கும் நடுவே கொடுத்து வருமெனின் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்பது நோக்கத் தக்கது. யா. கா. 30. உரை. முடுகியல் ஒலியால். 4. தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் உடையது நேரிசை; அவற்றொடு அம்போதரங்கம் உடையது அம்போ தரங்கம். அவற்றொடு வண்ணகம் உடையது வண்ணகம்.

3.