உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இ.ள்) 'கலி வெண்பா ஒன்று,' எனவும், 1‘தரவு கொச்சகக் கலிப்பாவும், தரவிணைக்கொச்சகக் கலிப்பாவும், சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவும், பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவும், மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவும் என ஐந்து வகைப்படும் கொச்சகக் கலிப்பா,' எனவும் இவவாற்றாற் கூறுபடுத்துச் சொன்னார் புலத்துறை முற்றிய பொய்தீர் புலவர் என்றவாறு. ‘பண்பறி புலவர்' என்று சிறப்பித்த அதனால், நேரீற்று இயற்சீர் வரும் ஒத்தாழிசைக் கலிப்பா உளவாயினும், ஒரு புடை ஒப்புமை நோக்கிக் கொச்சகக் கலிப்பாவின்பாற்படுத்து வழங்கப்படும் எனக் கொள்க.

ஏந்திசைத்துள்ளலும், அகவற்றுள்ளலும், பிரிந்திசைத் துள்ளலும் என்னும் இம்மூன்று துள்ளல் ஓசையானும் ஒன்பது கலிப்பாவினையும் கூறுபடுப்ப, இருபத்தேழாம். ன்பது கலிப்பாவினையும், ஆசிரிய நேர்த்தளை இரண்டும் ஒழித்து அல்லாத சிறப்புடை ஆறுதளையாலும் கூறுபடுப்ப, நூற்றெட்டாம். ஓசையும் தளையும் கூட்டி உறழ, முந்நூற்று இருபத்து நான்கு கலிப்பாவாம். கலி வெண்பாவினுள்ளும் கொச்சகக் கலிப்பாவினுள்ளும் ஆசிரிய நேர்த்தளை இரண்டும் அருகி வரப்பெறும் என்று அவற்றொடும் கூட்டிச் சொல் லுங்கால் முந்நூற்று அறுபது கலிப்பாவாம். பிறவாற்றாலும் விகற்பிக்க, எழுநூற்றிருபதாம். என்னை?

66

(நேரிசை வெண்பா)

ஒத்தா ழிசைக்கலியென் றோதிய ஆறினையும் முத்திறத் தோசையான் முன்முரணி - வைத்து வழுவற்ற ஆறிரண்டு வான்றளையால் மாற எழுழுப்பத் தாறாம் எனல்

“கொச்சகம் ஈரைந்தும் வெண்கலி ஓரிரண்டும்

வைத்திசையோர் மூன்றினால் மாறியபின்- மற்றவற்றை மாசில் பதினான்கு வான்றளையால் மாறவாம் ஆசில்கலிக் கைஞ்ஞூற்று நான்கு”

யா. வி. 86. மேற்.

– யா. வி. 86. மேற்.

ஒத்தாழிசைக்கலி இருநூற்று ஒருபத்தாறும், வெண்கலி எண்பத்து நான்கும், கொச்சகக்கலி நானூற்றிருபதுமாய், எழுநூற்றிருபதாம். பிறவாற்றானும் விகற்பிக்கப் பலவுமாம்.

1. ஒரு தரவு வந்தால் தரவு கொச்சகக் கலிப்பா. இரண்டு தரவு வந்தால் தரவிணைக் கொச்சகக் கலிப்பா. சில தாழிசை வந்தால் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா. பல தாழிசை வந்தால் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா. தரவு தாழிசை முதலிய உறுப்புக்கள் மயங்கியும் வெண்பா ஆசிரியத்தொடு மயங்கியும் வருவன மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.

- யா.வி.86. காண்க.