உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

எல்லா உறுப்பின் பொருளையும் தொகுத்துக் கொண்டு தந்து முன் நிற்றலின், ‘தரவு' என்பதூஉம் காரணக்குறி. ஒத்த ஒரு பொருள் முடிவினால் ஒத்த தாழ்ச்சியால் இசைத்தலானும், தரவிற் குறைந்து இசைத்தலானும், ஒத்தாழிசை என்பதூஉம் 'தாழிசை என்பதூஉம் காரணக்குறி.

ஒரு சொல்லாய்ப் பொருள் நிரம்பித் தனியே நிற்றலின், ‘தனி நிலை’ என்பதூஉம் காரணக்குறி.

ஓரிடத்து ஓடாநின்ற நீர், குழியானும் திடரானும் சார்ந்தவிடத்துச் சுரிந்தோடும் அதனைச் ‘சுரிந்து' என்றும் ‘சுழி’ என்றும் வழங்குவது போல, தான் கலியோசையாய் வாராநின்றது வெள்ளையானும் ஆசிரியமானுமாய்த் தக்க தொரு பொருளை உட்கொண்டு நிற்றலான், 1‘சுரிதகம்’ என்பதூஉம் காரணக்குறி.

பிறரும்,

"தந்துமுன் நிற்றலின் தரவே; தாழிசை ஒத்தா ழத்தின தொத்தா ழிசையே” “தனிதர நிற்றலின் தனிநிலை; குனிதிரை நீர்ச்சுழி போல நின்றுசுரிந் திறுதலின் 2சோர்ச்சியில் புலவர் சுரிதகம் என்ப

என்றார் ஆகலின்.

யா. கா. 30. மேற்.

30.மேற்

‘நிகழ்வது' என்று விதந்த அதனால், அம்போதரங்கமும், வண்ணகமும் இருமூன்றடியே தரவின் பெருமை; அல்லன, மூன்றடிச் சிறுமையின் மிக வாரா.

366

3‘“அம்பு வண்ணகம் இருமூன் றடியின;

முந்திய மூன்றடிச் சிறுமையின் மிகாவாய்த்

தந்துமுன் நிற்றலின் தரவா கும்மே”

"இரண்டடி சிறுமை ; பெருமையதன் இரட்டி

தரவிற் குறைந்தன தாழிசை ஆகும்”

“தனிநிலை சுரிதகம் வரைநிலை இலவே

66

சிறுமை இரண்டடி; பெருமைபொருள் முடிவே

சுரிதகம் என்ப *தொல்லை யோரே'

என்றார் ஆகலின், இவற்றை விரித்து உரைத்துக்கொள்க.

1.

உள்ளடங்கும் ஓசையை உடையது. 2. மயக்கமில்லாத புலவர். 3. அம்போதரங்கம். (பா. வே) *தொன்மொழிப் புலவர்.