உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

323

கலியுறுப்புக்கு அளவை, செயன்முறையுள்ளும், செயிற் றியத் துள்ளும், அகத்தியத்துள்ளும் முடிந்தவாறு அறிந்து கண்டு கொள்க. அவை ஈண்டு உரைப்பிற் பெருகும். வல்லார் வாய்க் கேட்டு உணர்க.

66

வரலாறு:

(நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா) 'வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து தோணெடுந் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப் *பூண்டுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ? இது தரவு.

66

சூருடைய கடுங்கடங்கள் சொலற்கரிய என்பவாற்

பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே? “சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவரால் நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே?

“சிலம்படைந்த வெங்கானம் சீரிலவே என்பவாற்

புலம்படைந்து நலந்தொலையப் போவாரோ பொருளிலரே?

இவை மூன்றும் தாழிசை.

எனவாங்கு.

இது தனிச்சொல்.

"அருளெனும் இலராய்ப் பொருள்வயிற் பிரிவோர் பன்னெடுங் காலமும் வாழியர்

  • பொன்னொடும் தேரொடும் தானையிற் பொலிந்தே” - யா. கா. 30. மேற். இது மூன்றடி ஆசிரியச் சுரிதகம்.

இது தரவு மூன்றடியால் வந்து, தாழிசை மூன்றும் இரண்டடி யால் வந்து, தனிச்சொற் பெற்று, மூன்றடி ஆசிரியத் சுரிதகத்தால் இற்ற நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. இது சிறப்புடைக் கலித் தளையால் வந்தது.

(நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா)

“முத்தொடு மணிதயங்கு முக்குடைக்கீழ் முனைவனாய் எத்திசையும் பல்லுயிர்கள் இன்புற இனிதிருந்து *பத்தறு காவதம் பகைபசி பிணிநீங்க

உத்தமர்கள் தொழுதேத்த ஒளிவரைபோற் செவ்வியோய் ! இது தரவு.

(பா. வே) *பூணொடுங்கு. *பொன்னெடுந். *பத்தறு.