உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“எள்ளனைத்தும் இடரின்றி எழில்மாண்ட 'பொன்னெயிலின் உள்ளிருந்த உன்னையே *உறுதுணையென் றடைந்தோரை 2வெள்ளில்சேர் வியன்காட்டுள் உறைகென்றல் விழுமிதோ? "குணங்களின் வரம்பிகந்து கூடிய "பன்னிரண்டு

66

கணங்களும்வந் தடியேத்தக் காதலித்துன் அடைந்தோரைப் பிணம்பிறங்கு பெருங்காட்டுள் உறைகென்றால் பெருமையோ?

விடத்தகைய வினைநீக்கி வெள்வளைக்கைச் செந்துவர்வாய் மடத்தகைய மயிலனையார் வணங்கநின் அடைந்தோரை தடத்தகைய காடுறைக என்பதுநின் தகுதியோ?

வை தாழிசை.

எனவாங் கு.

இது தனிச்சொல்.

66

அனைத்துணையை ஆயினும் ஆகமற் றுன்கண் தினைத்துணையும் தீயவை இன்மையிற் சேர்தும் வினைத்தொகையை வீட்டுக என்று”

இது சுரிதகம்.

இலக்கண விளக்கம், 738. மேற்.

இது நான்கடியாய்த் தரவு வந்து, தாழிசை மூன்றும் மூன்றடியாய்த் தனிச்சொல் வந்து, வெள்ளைச் சுரிதகமாய், ஆசிரியச் சிறப்பில் நிரைத்தளையால் வந்த நேரிசை ஒத் தாழிசைக் கலிப்பா.

பல அடியானும் வேற்றுத் தளையானும் வருவன வந்த வழிக் கண்டுகொள்க.

பிறரும் இதற்கு இலக்கணம் இவ்வாறே சொன்னார்.

என்னை?

66

தரவே தாழிசை தனிநிலை சுரிதகம்.

எனநான் குறுப்பின தொத்தா ழிசையே”

“தன்னுடை அந்தமும் தாழிசை யாதியும் துன்னு மிடத்துத் துணிந்தது போலிசை தரவுக் கியல்பே தன்னொடு நிற்றல்”

1. சமவசரணம் என்பது. 2. பிணப்பாடை.

3. "முனிவரர், ஆர்யாங்கனைகள், கொலையை விட உடன்பட்ட விலங்கு சாதி, பவணர் முதலான நால்வகைத் தேவர், அவரது மனைவியர், சக்கரவர்த்தி என உலகில் சொல்லப்பட்ட பன்னிரண்டு கணமும் சூழ்ந்த அருகதேவர்”.– திருநூற்றந்தாதி. 59 உரை. (பா. வே) *உயர் துணையென்.