உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

யாப்பருங்கலம்

தத்தமில் ஒத்துத் தரவின் அகப்பட நிற்பன மூன்று நிரந்தவை தாழிசை"

“ஆங்கென் கிளவி அடையாத் தொடைபட நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல்”

ஆசிரியம் வெண்பா எனவிவை தம்முள் ஒன்றாகி அடிபெற் றிறுதி வருவது 'சுழியம் எனப்பெயர் சுரிதக மாகும்

66

என்றார் காக்கைபாடினியார். “விட்டிசை முதற்பாத் தரவடி ஒத்தாங் கொட்டிய மூன்றிடைத் தாழிசை அதன்பின் மிக்கதோர் சொல்லாம் தனிநிலை சுரிதகம் ஆசிரி யத்தொடு வெள்ளையின் இறுதலென் றோதினார் ஒத்தா ழிசைக்கலிக் குறுப்பே’ என்றார் அவிநயனார்.

“தரவொன் றாகித் தாழிசை மூன்றாய்த் தனிச்சொல் இடைக்கிடந்து சுரிதகம் தழுவ வைத்த மரபின தொத்தா ழிசைக்கலி

66

"தரவின் அளவிற் சுரிதகம் அயற்பா

விரவும் என்ப ஆசிரியம் வெள்ளை'

325

என்றார் காம வேளைக் 2கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர்.

அவர்3தரவின் றுணையே சுரிதகம் ஆவது சிறப்புடைமையால் எடுத்து ஓதினார், தரவின் மிக்கும் குறைந்தும் வருவன உளவாயினும் எனக் கொள்க.

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

83. முந்திய தாழிசைக் கீறாய் முறைமுறை ஒன்றினுக் கொன்று சுருங்கும் உறுப்பின

தம்போ தரங்கவொத் தாழிசைக் கலியே.

(உகூ)

இஃது என் நுதலிற்றோ?' எனின் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) (தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் உடைத்தாய்) மேற்கூறிய தாழிசைக்குப் பின்னாய் (அடியினானும் சீரினானும்

1. சுழித்துச் செல்வது என்னும் காரணக் குறி. 2. சினந்த சிவபெருமான். 3. தரவின் அளவே சுரிதகத் தளவும் ஆவது சிறப்பு.