உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

முறையே) ஒன்றினுக்கு ஒன்று சுருங்கி வரும் உறுப்பு உடையது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்று வழங்கப்படும் என்றவாறு.

தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம்' என்றது, அதிகாரம் வருவித்து உரைக்கப்பட்டது.

'அம்போதரங்க உறுப்பு' எனினும், “அசையடி' எனினும், 'பிரிந்திசைக் குறள்' எனினும், 'சொற்சீர் அடி' எனினும், ‘எண்' எனினும் ஒக்கும். அவற்றை முறையே 2'பேரெண், சிற்றெண், இடையெண், அளவெண்' என்றும் சொல்லுவர்.

அவை உறுப்புத் தாழிசைப்பின் ஈரடியால் இரண்டும், அதன் பின் நாற்சீர் அடியால் நான்கும், அதன்பின் முச்சீர் அடியால் எட்டும், அதன்பின் இருசீர் அடியாற் பதினாறுமாய் வரும். என்னை?

“ஈரடி இரண்டும் ஓரடி நான்கும் முச்சீர் எட்டும் இருசீர் இரட்டியும் அச்சீர் குறையினும் அம்போ தரங்கம்"

எனவும்,

66

இரண்டும் நான்கும் எட்டும் இரட்டியும் வருவன முறையே ஒருநிரை படாஅ

திரண்டடி ஓரடி முச்சீர் இருசீர்

அசையடி வரினே அம்போ தரங்கம்”

எனவும் சொன்னார் ஆகலின்.

6

- (யா. கா. 30. மேற்)

முச்சீர் அடியால் எட்டும், இருசீர் அடியாற் பதினாறும் என்று சொல்லப்பட்டன குறைந்து வரவும் பெறும்.

ப்பொருள் எல்லாம் எற்றாற் பெறுதும்? எனின், உரையிற் கோடல் என்னும் தந்திர உத்தியானும், ‘முறைமுறை’ என்னும் விதப்பினானும், 'பிறநூல் முடிந்தது தானுடம் படுதல்’ என்பதனானும் பெறுதும் எனக் கொள்க.

1. அசையும் சீராகப் பயின்றுவரும் அடி.

2. அளவடி ஈரடியாய் இரண்டு வருவது பேரெண். அளவடி ஓரடியாய் நான்கு வருவது அளவெண். சிந்தடி ஓரடியாய் எட்டு வருவது இடையெண். குறளடி ஓரடியாய்ப் பதினாறு வருவது சிற்றெண் என்பது யா. கா. 30.

“இனி அல்லாதார்.

ஈரடிஇரண்டினைப் பேரெண் எனவும்,

ஓரடிநான்கினைச் சிற்றெண் எனவும்,

கடைஎண்ணினை இடைஎண் எனவும்,

ஒருசீரான் வருவனவற்றை அளவெண் எனவும் சொல்லுப”- தொல். செய். 145. பேரா.