உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு:

யாப்பருங்கலம்

(அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா) “கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்தக் கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைஇ அழலவிர் சுழல்செங்கண் 'அரிமாவாய் மலைந்தானைத் தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க ஆர்புனல் இழிகுருதி அகலிடம் உடனனைப்பக் கூறுகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்! இது தரவு.

66

‘முரைசதிர் வியன்மதுரை முழுவதூஉம் தலைபனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்லர் அடியோடு முடியிறுப்புண் டயர்ந்தவண் நிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ? “கலியொலி வியனுலகம் கலந்துட னனிநடுங்க வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்சோவும் மாணாதார் உடம்போடு மறம்பிதிர* வெதிர்கலங்கச் சேணுயர் இருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ? “படுமணி இனநிரைகள் பரந்துடன் இரிந்தோடக் கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு வெரிநொடு மருப்பொசிய *வீழ்ந்துதிறம் வேறாக எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இகலாமோ? இவை தாழிசை.

"இலங்கொளி மரகதம் எழில்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கை மாஅல்! நின்னிறம்.

"விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும் பொருகளி றட்டோய் ! புரையும் நின்னுடை.

இவை பேரெண்.

“கண்கவர் கதிர்மணி கனலும் சென்னியை; தண்சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை; ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை; வலிமிகு சகடம் மாற்றிய அடியினை.

இவை சிற்றெண்.

“போரவுணர்க் கடந்தோய் நீ புணர்மருதம் பிளந்தோய் நீ ;

1. நரசிம்மம்.

(பா. வே) *வெதிர்மலைந்து. *வீழ்ந்துதிறல், வீழ்ந்துநிறம்.

327