உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

  • நீரகலம் அளந்தோய் நீ;

நிழல்திகழும் படைபோய் நீ

வை இடையெண்.

“ஊழி நீ ; உலகு நீ;

உருவு நீ ; அருவு நீ; ஆழி நீ ; அருளு நீ ; அறமு நீ ; மறமு நீ. இவை அளவெண்.

எனவாங்கு.

து தனிச்சொல்

66

‘அடுதிறல் ஒருவ! நிற் பரவுதும் எங்கோன் தொடுகழற் கொடும்பூட் பகட்டெழில் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன் தொன்றுமுதிர் கடலுலகம் முழுதுடன் ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே”

இது சுரிதகம்.

'(விளக்கத்தனார்)

- தொல். செய். 146. பேரா. மேற்.

-யா. கா. 30. மேற்.

இஃது எட்டும் பதினாறும் என்று சொல்லப்பட்ட முச்சீர் அடி அம்போதரங்கமும் இருசீர் அடி அம்போதரங்கமும் குறைந்து, முச்சீர் அடி நான்காய் இருசீர் அடி எட்டாய், சிறப்பில் இயற்சீர் வெண்டளையால் வந்த அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா.

66

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

“நலங்கிளர் திருமணியும் நன்பொன்னும் குயின்றழகார் இலங்கெயிற் றழலரிமான் எருத்தஞ்சேர் அணையின்மேல் இருபுடையும் இயக்கரசர் இணைக்கவரி எடுத்தெறிய விரிதாமம் துயல்வரூஉம் வெண்குடைமூன் றுடனிழற்ற வண்டரற்ற நாற்காதம் வகைமாண உயர்ந்தோங்கும் தண்டளிர்ப்பூம் பிண்டிக்கீழ்த் தகைபெறவீற் றிருந்தனையே.

து தரவு.

1.

“விளக்கத்தனார் பாடிய 'கெடலரு மாமுனிவர்' என்னும் கலிப்பா புறநிலை வாழ்த்தாய் வந்தது பிறவெனின், அஃது ஆசிரியச் சுரிதகத்தால் வந்தமையால் குற்றமின்றென்க.

(பா. வே) *நீரகிலம்.

யா.வி.93. உரை.