உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

17

யாப்பருங்கல விருத்தியின் ஆசிரியர் மேற்கோளுக்குப் பயன்படுத்தும் இலக்கண ஆசிரியர்களுள் மயேச்சுரர் என்பார் ஒருவர். அவரை மட்டும் மோனை எதுகை நயமுற நெஞ்சாரப் பாராட்டுகின்றார். இதனால், 'மயேச்சுரரின் மாணவரோ, அவர் பரம்பரையினரோ விருத்தியுரை கண்டவர் ஆதல் வேண்டும்'

'என்பர்.

மயேச்சுரர்மேல் மட்டற்ற ஈடுபாடுடையவர் விருத்தி யுரைகாரர் என்பது ஏற்கத்தக்கதே. அவ்வீடுபாடு, சைவ சமயத்தின்பால் மயேச்சுரர் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாகவோ, சிவபெருமான் பெயர்பூண்டு அவர் விளங்கியது காரணமாகவோ ஏற்பட்டிருக்கவும் கூடும். அவர் காட்டும் 2அடைமொழி அழகுகள் அவ்வாறு எண்ணுதற்கும்

இடமளிக்கின்றன.

விருத்தியுரை ஆசிரியர்:

யாப்பருங்கல விருத்தியின் ஆசிரியர் கடலன்ன கல்வியாளர். அவர் செல்லாத துறையில்லை; கல்லாத கலையில்லை என்று சொல்லுமாறு விரிந்து பரந்த பேரறிவினர். பாயிரம் உட்பட 232 அடிகளே (நூற்பா அகவல் அடிகள்) கொண்டது யாப்பருங்கலம். அதற்கு அவர் கண்டுள்ள உரைவிரிவுப் பரப்பை அச்சிட்ட நூற்பக்கங்களைப் பார்க்கவே புலப்படும். மூன்றே நூற் பாக்களைக் கொண்டது ஒழிபியல். அதில் இரண்டாம் நூற்பா (95)7 அடிகளைக் கொண்டது. அதற்கு உரை விளக்கம் 378 ஆம் பக்கமுதல் 525 ஆம் பக்க முடிய விரிந்து செல்லுகின்றது. இவ்வொன்றே உரையாசிரியரின் புலமைத் திறத்தைப் பறை யறைந்து சொல்லவல்லதாம்.

உரையிடையே அகத்தியம். அகநானூறு, அஞ்சனம், அடிநூல், அணிநூல், அமிர்தபதி. அவிநயம், அறிவுடை நம்பி சிந்தம், ஆதிநாதர் ஆய்ந்த நூல், இடைக்காடர் ஊசிமுறி" ரணமாமஞ்சடை. இராமாயணம், இறையனார் களவியல்,

10

1. “விருத்தியுரை எழுதியவர் பெருமான் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் என அவர் சிறப்பிக்கும் மயேச்சுரருடைய மாணவரோ அவர் பரம்பரையினரோ ஆதல்வேண்டும்” - தென்றலிலே தேன் மொழி. (பக் 59-60) டாக்டர் மொ. அ. துரையரங்கனார்.

2. பிறை நெடுமுடிக் கறைடற் றரனார் பெயர்மகிழ்ந்த பேராசிரியர் (53,133). நீர்மலிந்த வார்சடையோன் பேர்மகிழ்ந்த பேராசிரியர் (117, 263, 268). வாம மேகலை மாதையோர் பாகனார் நாமம் மகிழ்ந்த நல்லாசிரியர் (136). உயரும் புரம் நகரச் செற்றவன் பெயர்மகிழ்ந்த பேராசிரியர் (221). பெண்ணொரு பாகன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் (293) காமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர் (300, 341, 349). திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளின் திருப்பெயர் மகிழ்ந்த தொன்னூற் கவிஞர் (312).