உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இவை முச்சீர் ஓரடி எட்டம்போ தரங்கம்.

‘பரமன் நீ ;

பண்ணவன் நீ;

உரவன் நீ;

ஊழி நீ ;

அருளும் நீ ;

பகவன் நீ ;

புண்ணியன் நீ; குரவன் நீ; உலகு நீ; அறமும் நீ;

அணைவும் நீ ;

அன்பும் நீ ;

பொருளும் நீ ;

பூமி நீ ;

பொருப்பும் நீ ;

புணையும் நீ;

இவை இருசீர் ஓரடிப் பதினாறு அம்போ தரங்கம்.

எனவாங்கு.

இது தனிச்சொல்.

66

'அருள்நெறி ஒருவ! நிற் பரவுதும் *எங்கோத் திருமிகு சிறப்பிற் பெருவரை அகலத்

தெண்மிகு தானைப் பண்ணமை நெடுந்தேர் அண்ணல் யானைச் செங்கோல் விண்ணவன் செருமுனை செருக்கறத் தொலைச்சி ஒருதனி வெண்குடை ஓங்குக எனவே”

இது சுரிதகம்.

இதனுள் எட்டும் பதினாறும் என்று சொல்லப்பட்ட உறுப்புக் குறையாதே வந்தவாறு கண்டுகொள்க.

இஃது அம்போதரங்க உறுப்பு அழகு குறையாதே, ஆசிரியச் சிறப்பில் நிரைத்தளையால் வந்த அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா.

66

பிற தளையாலும் வந்தவழிக் கண்டுகொள்க.

(கட்டளைக் கலித்துறை)

"தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொல் சுரிதகமாய்

ரலொன்றின் நேரிசை ஒத்தா ழிசைக்கலி ; நீர்த்திரைபோல் மரபொன்றும் நேரடி முச்சீர் குறள்நடு வேமடுப்ப

தரவொன்றும் அல்குல்! அம்போ தரங்கவொத் தாழிசையே'

இக்காரிகையை விரித்து உரைத்துக் கொள்க.

யா. கா. 30.

பிறரும் இதற்கு இலக்கணம் இவ்வாறே சொன்னார்.

என்னை?

(பா. வே) *எங்கோன்.