உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இரண்டடியால் ஓர் அராகம் வந்து, இரண்டு ஓரடியால் பேரெண் அறுசீரால் வந்து, இடையெண் முச்சீரால் வந்து. எட்டுச் சிற்றெண் ஒரு சீரும் ஓர் அசையுமாய் இம்மூன்று அம்போதரங்க உறுப்பும் பெற்று முடிவது இடை இடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்றும் ;

தரவும் சுரிதகமும் நான்கடியால் வந்து, ஈரடியால் மூன்று தாழிசை வந்து, தாழிசைப் பின்னர்த் தனிச்சொல் முன் இரண்ட டியால் ஓர் அராகம் வந்து, ஓர் அடியால் இரண்டு பேரெண் வந்து, இரு சீரால் நான்கு இடையெண் வந்து, ஒரு சீரால் எட்டுச் சிற்றெண் வந்து. இம்மூன்று அம்போதரங்க உறுப்பும் பெற்று முடிவது கடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்றும் வேண்டுவர் என்பது அறிவித்தற்கு வேண்டப் பட்டது. என்னை?

“தாழிசைப் பின்னர்த் தனிச்சொல் முன்னர் ஆழ்புனற் றிரைபுரை அம்போ தரங்கம் உம்பர் மொழிந்த தாழிசை வழியே அம்போ தரங்கம் வண்ணகமும் ஆகும்”

66

அவையே,

'தேவ பாணியென் றேவவும் படுமே”

“வழிபடு தெய்வம் வழுத்திவழி மொழியின் தலையிடை கடையென அம்போ தரங்கம் நிலையினவ் வளவின் நிலையுங் காலை அராகம் பேரெண் இடையெண் சிற்றெண் *விராக என்ப தாழிசைப் பின்னர்க் கூறிய தரவே ஆறடித் தாகும்”

“தரவின் வழிமுறை தாழிசை மூன்றும்

66

வரன்முறை பிறழா நாலடிக் குரிய;

தந்துமுன் நிறீஇத் தரவினிற் றாழிசை

உறுப்பினும் குணத்தினும் நெறிப்படப் புணரும்

“தாழிசைப் பின்னர் அராகவடி இரண்டே

அராகத் திறுதி பேரெண் இரண்டு

விராக என்ப இரண்டிரண் டடியால் பேரெண் வழியால் இடையெண் நாலடி நேரல் வேண்டும் நெறியறி புலவர்”

1. கடவுள் வாழ்த்துச் செய்யுள். (பா. வே) *விராகம்.