உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அருளுடை ஒருவ! நின் அடியிணை பரவுதும் இருளுடை 'நாற்கதி இடர்முழு தகலப்

பாடுதற் குரிய பல்புகழ்

வீடுபே றுலகம் கூடுக எனவே'

இது சுரிதகம்.

இது கடையளவு அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பாப் பெருந்தேவபாணி.

இவ்வாறு விரித்து வெளிப்படச் சொன்னார் ; 2திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் திருப்பெயர் மகிழ்ந்த தொன்னூற் கவிஞர்.

இம்மூன்றினையும்

அளவியல் அம்போதரங்க ஒத் தாழிசைக் கலிப்பா என்றும், அல்லாதனவற்றை அளவழி அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்றும் வழங்குவாரும் உளர் எனக் கொள்க.

அச.

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

அவற்றொடு முடுகியல் அடியுடை அராகம் மடுப்பது வண்ணக ஒத்தா ழிசைக்கலி.

இஃது என் நுதலிற்றோ?' எனின், வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) மேற்சொல்லப்பட்ட தரவும் தாழிசையும், அம்போ தரங்க உறுப்பும், தனிச்சொல்லும், சுரிதகமும் என்றிவற்றொடும் ஒருங்கு கடுகி நடக்கும் அடியுடை அராக உறுப்பும், தாழிசைப் பின்னைக் கூட்டிச் சொல்லப் படுவது யாது? அது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என்று வழங்கப்படும் என்றவாறு.

66

"தாழிசைப் பின்னே' என்பது அதிகாரத்தால் வருவித்து உரைக்கப்பட்டது.

‘தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச் சொல், சுரிதகம்' எனக் கொள்க.

‘அராகம்' எனினும், 'வண்ணகம்' எனினும், 'அடுக்கியல்’ எனினும், *‘முடுகியல்' எனினும், ஒக்கும்.

“அவற்றொடும் அராகம் மடுப்பது வண்ணக ஒத்தா ழிசைக்கலி

என்றாலும் 'முடுகியலுடைய அராகம்' என்பது பெறலாம்; அராக அடி முடுகி நடக்கும் இயற்கையது ஆகலானும்,

1. தேவர் நரகர் மனிதர் விலங்கு.

2. மயேச்சுரர். * (பா.வே.) முடுகிசை