உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

339

66

“அச்சொலப் பட்ட உறுப்பொ டராகவடி வைத்த நடையது வண்ணகம் ஆகும்’

என்றார் காக்கைபாடினியார் ஆகலானும், முடுகியலடியே கொள்ளப்பட்டது ஆகலானும்; பெயர்த்தும், 'முடுகியல் அடியுடை அராகம்' என்று எடுத்து ஓத வேண்டியது என்னை?

அவ்வராக உறுப்பு, அளவடி முதலாகிய எல்லா அடியாலும் வரப்பெறும்; அடிவரையாது, சிறுமை நான்கடி,பெருமை எட்டடி, இடை டையிடை எத்துணையாயினும் வரப்பெறும் என்பதூஉம், ஒரு சாரனவற்றுள் அகவலும் வெள்ளையும் விரவி அராகமாயும் அருகி வரப்பெறும் என்பதூஉம், அம்போ தரங்க உறுப்புச் சில குறைந்தும் வரப்பெறும் என்ப தூஉம் அறிவித்தற்கு வேண்டப் பட்டது. என்னை?

“அளவடி முதலா அனைத்தினும் நான்கடி முதலா இரட்டியும் முடுகியல் நடக்கும்' என்றார் ஆகலின்.

யா. கா. 31. மேற்.

அஃதே எனின், 'அவற்றொடு முடுகடி அராகம் மடுப்பது’ என்றாலும், உரைத்த எல்லாம் பெறலாம், 'விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்,' என்பவாகலின் ; ; இயல்' என்று விதப்படுக்கி ஓதியது என்னை?

இதன் பயன், இவற்றிற்கு உதாரணம் காட்டிப் பின்னர்ச் சொல்லுதும்.

J

இவற்றுக்குச் செய்யுள் வருமாறு:

(வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா)

“விளங்குமணிப் பசும்பொன்னின் விரித்தமைத்துக் கதிர்கான்ற துளங்குமணிக் கனைகழற்கால் 'துறுமலர் நறும்பைந்தார்ப் கீபரூஉத் தடக்கை மதயானைப் *பகட்டெழில் நெரிகுஞ்சி 3குரூஉக்கொண்ட மணிப்பூணோய் ! குறையிரந்து முன்னாட்கண் மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கும் அல்லார்க்கும் தாயாகித் தலையளிக்கும் தண்டுறை *ஊர! நீ.

இது தரவு.

1.

66

காட்சியாற் கலப்பெய்தி *எந்திறத்துக் கதிப்பாகி *மாட்சியா றறியாத மரபொத்தாய் கரவினாற்

நெருங்கிய மலர். 2. பருத்து அகன்ற கை. 3. ஒளியுடைய.

(பா. வே) பணையெருத்தின் * மிசைத்தோன்றும். * ஊரகேள். * எத்திறத்தும் கதிர்ப்பாகி. * மாட்சியாற் றிரியாத.