உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

66

'அத்திறத்தால் அசைந்தன தோள்; "அலரதற்கு மெலிந்தன கண்; “பொய்த்துரையால் புலர்ந்தது முகம்; “பொன்னிறத்தாற் போர்த்தனமுலை; அழலினால் அசைந்தது நகை; 'அணியினால் ஒசிந்ததிடை;

66

66

‘குழலினால் அவிர்ந்தது முடி; குறையினாற் கோடிற்று நிறை”

வை முச்சீர் ஓரடி எட்டு அம்போ தரங்கம்.

'உட்கொண்ட தகைத்தொருபால்;

"உலகறிந்த அலர்த்தொருபால்; “கட்கொண்டால் துளித்தொருபால்;

“கழிவெய்தும் படித்தொருபால்; 1“பரிவுறூஉம் தகைத்தொருபால் ;

66

“படர்வுறூஉம் பசப்பொருபால்;

“இரவுறூஉம் துயரொருபால்;

"இளிவந்த எழிற்றொருபால்;

"மெலிவுவந் தலைத்தொருபால்;

“விளர்ப்புவந் தடைந்தொருபால்;

“பொலிவுசென் றகன்றொருபால்;

“பொறைவந்து கூர்ந்தொருபால்;

“காதலிற் கதிர்ப்பொருபால்;

66

‘கட்படாத் துயரொருபால் ;

“ஏதிலர்சென் றணைந்தொருபால்;

"இயனாணிற் செறிவொருபால்.

வை இருசீர் ஓரடிப் பதினாறு அம்போ தரங்கம்.

எனவாங்கு,

இது தனிச்சொல்.

'இன்னதிவ் வழக்கம் இத்திறம் இவணலம் என்னவும் முன்னாள் துன்னாய் ஆகிக்

கலந்த வண்மையை ஆயினும் நலந்தகக்

கிளையொடு கெழீஇத் தளையவிழ் கோதையைக்

1. அன்புறும்.

(பா. வே) *குழலினும் விரிந்தது. *வெளிற்றொருபால்.

341