உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

நகையென மினலென நளிர்சுடர் ஒளியென

6

வகையமை அமிழ்தென வளைகடல் மணியென முகைவிரி மலரென முறுவலை;

குழலென அமிழ்தென நனியினி கனியென மலியொலி மருவிய மலருறை "மிDறென

மகிழ்தரு குயிலென மழலைய மொழியினை; பெறலரு மரபின திருவமர் அருள்மொழி உருவருள் உறுவர்கள் ஒழிவிலர் விரவலின் மருளற அருளிய

அறிவன தருள்மொழி மகிழ்ந்தனை.

வை அராகம்.

“குரும்பையும் பொற்செப்பும் கோங்கின் அரும்பும் விரும்பின வீங்கு முலை.

  • 66

"முலைத்தலைச் செஞ்சுணங்கு வேங்கை மலரோ டலைத்தன அம்பொற் பிதிர்.

இவை பேரெண்.

மணிபுனைந்த முடியினைநீ ;

மானிகலும் நோக்கினைநீ;

அணிபுனைந்த அல்குலைநீ;

அரும்புறழும் முறுவலைநீ;

காதணிந்த குழையினைநீ ;

கதுப்பணிந்த கண்ணியை நீ;

போதணிந்த குழலினை நீ; பொருவரிய புகழினை நீ.

இவை சிற்றெண்.

அதனால்,

து தனிச்சொல்.

66

“அருள்நெறி பயந்த அறிவருள் அறிவன் பொருள்நெறி புகன்ற வாய்மொழி வழாது குணந்துறை போகிய எண்ணரும் பெருமைக் கணந்துறை போகிய காவலன் கண்ணி உலவுபுகழ் உரவோன் திருநகர் நிலவி எம்மிடர் நீக்குமதி நீயே” இது 'சுரிதகம்.

1. வண்டு. (பா. வே) *முலைத்தலை நெஞ்சுணங்கு.

349