உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

351

66

‘தன்றளை ஓசை தழீஇநின் றீற்றடி

வெண்பாக் கலிவெண் பாவே’’

என்னாது, “ஈற்றடி வெண்பா இயலது' என்று விதப்பித்த அதனால், ஈற்றடி வெள்ளோசை கொண்டும் முச்சீர் அடியால் இறுவதே கொள்ளப்படும் எனக் கொள்க. என்னை?

“கலியொலி கொண்டு தன்றளை விரவா இறுமடி வரினே வெண்கலி ஆகும்”

என்றார் அவிநயனார்.

“தளைகலி தட்டன தன்சீர் வெள்ளை

களையுந இன்றிக் கடையடி குறையின் விரவிவரல் இல்லா வெண்கலி ஆகும்"

என்றார் மயேச்சுரர்.

“வெண்டளை தன்றளை என்றிரு தன்மையின் வெண்பா இயலது வெண்கலி ஆகும்”

என்றார் காக்கைபாடினியார்.

யா. கா. 31. மேற்.

"வெண்கலிப்பா' எனினும், 'கலிவெண்பா' எனினும்

ஒக்கும்.

வரலாறு:

(கலி வெண்பா)

“பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானா விண்கொண்ட அசோகின்கீழ் விழுமியோர் பெருமானைக் கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும் 'பயில்வார்கள் விண்ணாளும் வேந்தரா வார்”

இது சிறப்புடைக் கலித்தளையால் வந்த கலி வெண்பா.

66

'நாகிளம்பூம் பிண்டிக்கீழ் நான்முகனாய் வானிறைஞ்ச

4மாகதஞ்சேர் வாய்மொழியான் *மாதவர்க்கும் அல்லார்க்கும் தீதகல எடுத்துரைத்தான் சேவடிசென் றடைந்தார்க்கு

மாதுயரம் தீர்ப்ப தெளிது”

இஃது உரிச்சீர் வெண்டளையால் வந்த கலி வெண்பா. 'ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தண்

1.

66

வார்மலர்த் தடங்கண்ணாள் வலைப்பட்டு வருந்தியவென்

327 ஆம் பக்கம் குறிப்பு 4 காண்க. 2. செறிதல்குறையாத. 3. அடைவார்கள். 4. அர்த்தமாகதி என்னும் பிராகிருதமொழி.

(பா. வே) *வாசவர்க்கும்.