உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

தார்வரை அகல்மார்பன் தனிமையை அறியுங்கொல் சீர்நிறை கொடியிடை சிறந்து!”

இது

யா. கா. 31. மேற்.

து சிறப்பில் ஆசிரிய நிரைத்தளையால் வந்த கலி

து

வெண்பா.

“முழங்குகுரல் *முரசியம்ப முத்திலங்கு நெடுங்குடைக்கீழ்ப் பொழிந்தமதக் கருஞ்சுவட்டுப் பொறிமுகத்த களிறூர்ந்து பெருநிலம் பொதுநீக்கிப் பெயராத பெருமையாற் பொருகழற்கால் வயமன்னர் போற்றிசைப்ப வீற்றிருப்பார் மருள்சேர்ந்த நெறிநீக்கி வாய்மைசால் குணந்தாங்கி அருள்சேர்ந்த அறம்புரிந்தார் அமர்ந்து

இது சிறப்பில் வஞ்சித் தளையால் வந்த வெண்கலிப்பா. ஒழிந்த தளைபட்ட வெண்கலிப்பாவும் வந்த வழிக் கண்டு

கொள்க.

இச்சூத்திரத்துள் ‘தன்றளை ஓசை தழீஇநின்று' என்பது’ வேண்டா, 'ஈற்றடி வெண்பா ஈற்றடி வெண்பா இயலது கலிவெண்பா,' என அமையும். என்னை?

"வெள்ளையுட் பிறதளை விரவா; அல்லன எல்லாத்தளையும் மயங்கியும் வழங்கும்'

யா. வி. 22.

என்னும் இலக்கணத்தால், வெண்பா ஒழித்து அல்லாத செய்யுள்களுள் வேற்றுத் தளை விரவும் என்பதூஉம், விரவினும் தன்றளையால் வருவது சிறப்புடைத்து என்பதூஉம் கூறப்பட்டன.

துள்ளல் இசையன கலியே,' (யா. வி. 78) என்னும் பொது இலக்கணத்தால், கலி எல்லாம் துள்ளல் ஓசையாலே வரும் என்பதூஉம் சொல்லப்பட்டது ஆகலின், பெயர்த்தும் 'தன்றளை ஓசை தழீஇநின்று' என்று கூறியது கூற வேண்டியது என்னை?

ரு

து

ஒருசார் ஆசிரியர், 'செப்பல் ஓசையிற் சிறிது வழுவிற்று வழுவாது என்னும் பெற்றியானும், செப்பல் ஓசையிற் சிதை யாதும் ஒரு பொருண்மேல் வெள்ளடியால் வந்து வெண்பா இறுமாறே இறுவன கலி வெண்பா என்னும் சிறப்புடைய,’ என்று எடுத்து ஓதினார் என்பது அறிவித்தற்கு வேண்டப் பட்டது. என்னை?

66

ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலான் *திரிபின்றி வருவது கலிவெண் பாட்டே

என்றார் தொல்காப்பியனார் ஆகலின்.

(பா.வே)*முழவியம்ப. வெண்குடைக் கீழ்ப். *வழுவின்றி நடப்பது.

- செய். 154.