உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு:

யாப்பருங்கலம்

(கலி வெண்பா)

‘சுடர்த்தொடீஇ ! கேளாய்: தெருவினாம் ஆடும் மணற்சிற்றில் காலிற் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர்நாள் அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே ! உண்ணுநீர் வேட்டேன்,' எனவந்தாற் கன்னை அடர்பொற் 'சிரகத்தால் வாக்கிச் 'சுடரிழாய் ! உண்ணுநீர் ஊட்டிவா,' என்றாள் ; எனயானும் தன்னை அறியாது சென்றேன்; மற் றென்னை வளைமுன்கை பற்றி நலியத் 'தெருமந்திட்(டு),

'அன்னாய் ! இவனொருவன் செய்ததுகாண் !' என்றேனா, அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்

3

'உண்ணுநீர் விக்கினான்,' என்றேனா, அன்னையும் தன்னைப் புறம்பழித்து நீவ, மற் றென்னைக்

கடைக்கணாற் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தானக் கள்வன் மகன்”

353

து வெள்ளோசை கொண்டு ஒரு பொருண்மேல் வெள்ளடியால் வந்த கலி வெண்பா.

வெள்ளோசையின்

வழுவி

- கலித்தொகை. 51.

வேற்றுத்தளையால்

வருவனவும் வந்துழிக் கண்டு கொள்க. இதுவும் விதப்பினால் உரைத்துக் கொள்க.

“கலிவெண் பாவே' என்றவழி ஏகார விதப்பினால், 4வெள்ளோசையினால் வருவதனைக்

என்றும், பிறவாற்றால் வருவனவற்றை

கலி வெண்பா'

வெண்கலிப்பா’

என்றும் வேறுபடுத்துச் சொல்வாரும் உளர் எனக் கொள்க.

66

(கட்டளைக் கலித்துறை)

அசையடி முன்னர் அராகம்வந் தெல்லா உறுப்புமுண்டேல் வசையறு வண்ணக ஒத்தா ழிசைக்கலி ; வான்றளைதட்

1. குவளை; செம்பு 2. மனங்கலங்கி. 3. வர. 4. “கலித்தளைதட்டுக் கலியோசை தழுவியும் வெண்டளைதட்டு வெள்ளோசை தழுவியும் வந்து ஈற்றடி முச்சீரான் இறுமெனின் அது வெண்கலிப்பா என்றும் கலிவெண்பா என்றும் பெயரிட்டு வழங்கப்படும்.” யா. கா. 31. இதனால் இருவகை வெண்டளைகளாலும் வருவது கலிவெண்பா என்றும், கலி முதலிய பிறதளைகளும் கலந்து வருவது வெண்கலிப்பா என்றும் கொள்ளப் பெறும் என்க.