உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

டிசைதன தாகியும் வெண்பா இயைந்துமின் பான்மொழியாய் ! விசையறு சிந்தடி யாலிறு மாய்விடின் வெண்கலியே”

இவ்வியாப்பருங்கலப்

புறநடைக்

துரைத்துக் கொள்க.

கொச்சகக் கலிப்பா

காரிகையை

யா. கா. 31. விரித்

(ங உ)

அகூ. தரவே தரவிணை தாழிசை தாமும் சிலவும் பலவும் சிறந்து மயங்கியும் மற்றும் விகற்பம் பலவாய வருநவும் கொச்சகம் என்னும் குறியின ஆகும்.

ஃது என் நுதலிற்றோ?' எனின், கொச்சகக் கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) தரவே தரவிணை தாழிசை தாமும் சிலவும் பலவும் சிறந்து மயங்கியும் - தரவே வந்தும், தரவு இரண்டாய் வந்தும், தாழிசை சில வந்தும், தாழிசை பல வந்தும், தரவு முதலாகிய ஆறு உறுப்பும் தம்முள் மயங்கியும் வெண்பாவினோடும் ஆசிரியத்தி னோடும் மயங்கியும் வருவன எல்லாம் கொச்சகக் கலிப்பா என்றும்;

(தரவு ஒன்றே வந்தால் ‘தரவு கொச்சகக் கலிப்பா' என்றும், தரவு இரண்டாய் வந்தால் ‘தரவிணைக் கொச்சகக் கலிப்பா’ என்றும், சில தாழிசையால் வந்தால் ‘சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா' என்றும், பல தாழிசையால் வந்தால் 'பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா' என்றும், தரவு முதலாகிய ஆறு உறுப்பும் தம்முள் மயங்கியும் பிற பாவினோடு மயங்கியும் வந்தால் அதனை ‘மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா’ என்றும் வழங்குப.

சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்,’ (நன். 14) என்பது தந்திர உத்தி ஆகலின், இவ்வாறு உரைக்கப்பட்டது.

‘தாமும்' என்று மிகுத்துச் சொல்லிய அதனால், ‘தனிச் சொல் இடை யிடையே வரவும் அமையும்; அம்போதரங்க உறுப்பும் அருகி வரும் ; சுரிதகமும் அருகி வரப்பெறும்,' எனக்

கொள்க.

‘சிறந்து’ என்று மிகுத்துச் சொல்லிய அதனால், இவற்றின் தாழிசை ஈற்றடி குறைந்து வரவும் அமையும் எனக் கொள்க)

மற்றும் விகற்பம் பலவாய் வருநவும் கொச்சகம் என்னும் குறியின ஆகும் - கலிக்கு ஓதப்பட்ட உறுப்பெல்லாம் குறை வின்றிக் கலியது தன்மை பெற்ற உறுப்புக்கள் மிக்கும், குறைந்தும், பிறழ்ந்தும், உறழ்ந்தும், வண்ணமும் அடியும் தொடையும் மயங்கியும் அராக அடி அந்தாதித் தொடை தொடுத்தும்,