உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

355

அத்தொடை பலவாய் வந்தும், கலிக்கண் வாரா என்ற நேரீற்று இயற்சீர் வந்தும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் வந்தும், ஐஞ்சீர் அடி வந்தும், முச்சீராலும் இரு சீராலும் அம்போ தரங்க உறுப்புப் பெற்றும் இவ்வாறு ஒத்தாழிசைக் கலிப்பாக்களோடு ஒவ்வாது வருவன எல்லாம் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என்றும் வழங்கப்படும் என்றவாறு.

தரவு ஒன்றாய்ச் சுரிதகம் பெற்றதனைச் சுரிதகத் தரவு கொச்சகம் என்றும், சுரிதகம் இல்லாததனை இயற்றரவு கொச்சம் என்றும், தரவு இரட்டித்துச் சுரிதகம் பெற்று வந்ததனைச் சுரிதகத் தரவிணைக் கொச்சகம் என்றும், சுரிதகம் இல்லாத தனை இயற்றரவிணைக் கொச்சகம் என்றும், ஈற்றடி குறையாது சில தாழிசையால் வந்ததனை இயற்சிஃறாழிசைக் கொச்சகம் என்றும், ஈற்றடி குறைந்து சில தாழிசையால் வந்ததனைக் குறைச்சிஃறாழிசைக் கொச்சகம் என்றும், ஈற்றடி குறையாது பல தாழிசையால் வந்ததனை இயற்பஃறாழிசைக் கொச்சகம் என்றும், ஈற்றடி குறைந்து பல தாழிசையால் வந்ததனை குறைப் பஃறாழிசைக் கொச்சகம் என்றும், கலிக்கு ஓதப்பட்ட 2 உறுப்புக் களோடு மயங்கி வந்ததனை இயல்மயங்கிசைக் கொச்சகம் என்றும், பிற பாவினோடு மயங்கி வந்ததனை அயல் மயங்கிசைக் கொச்சகம் என்றும் இவ்வாறு வேறுபடுத்துச் சொல்வாரும் உளர் எனக் கொள்க. என்னை?

“ஓதப் பட்ட உறுப்புவகை எல்லாம் ஏதப் படாமைக் கலிக்கியல் பெய்தி மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் வண்ணமும் அடியும் தொடையும் மயங்கியும் *அடக்கியல் அந்தம் தொடுத்தன பல்கியும் கலிவயிற் கடிந்த சீரிடை மிடைந்தும் நாற்சீர் இறந்த சீரொடு சிவணியும்

முச்சீர் இருசீர் அம்போ தரங்கம்

அச்சீர் *முடிவடி அழிவில தழுவியும் கொச்சகக் கலியெனக் கூறவும் படுமே’

என்றார் பிறரும் எனக் கொள்க.

99

யா. கா. 32. மேற்.

அவற்றை இயல் மயங்கிசை என்று வழங்குவர் எனக்

கொள்க.

(பா. வே) *அடுக்கியல். * முடிவிடை.