உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“மற்றும் விகற்பம் பலவாய் வருநவும்

கொச்சகம் என்னும் குறியின ஆகும்”

என்பதனாலே, இப்பொருள் எல்லாம் விரித்து உரைத்துக் கொள்க.

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

(இயற்றரவு கொச்சகக் கலிப்பா)

“செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே”

எனவும்,

“வெறிகொண் டலரும் பொழிலார் சிமயம் முறிகொண் டறையும் முரல்வார் சுரும்பின் ஒலிகொண் டதனின் னிசைபா டிவர நலமின் புறுநா டகமா டிநிற்ப

மகமந் திசென்றந் திதொழப் படுஞ்சீர்

மிகநந் தியவிஞ் சையன்வென் றனனே

99

யா. வி. 15. 20. 32. 78. மேற்.

எனவும் இவை இயற்றரவு கொச்சகக் கலிப்பா.

66

(இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா)

'வார்பணிய தாமத்தால் வளைக்கையோர் வண்டோச்ச ஊர்பணிய மதியம்போல் நெடுங்குடைக்கீழ் உலாப்போந்தான் கூர்பணிய வேற்றானைக் கொற்கையார் கோமானே. அவற்கண்டு,

பூமலர் நறுங்கோதை புலம்பலைப்ப நறுங்கொண்டைத் தூமலர்க்கண் மடவார்க்குத் தொல்பகையே அன்றியும் காவலற்குப் பெரியதோர் கடனாகிக் கிடவாதே”

இது து வெண்டளையால் வந்த இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா.

(சுரிதகத் தரவு கொச்சகம்)

“குடநிலைத் தண்புறவிற் கோவலர் எடுத்தார்ப்பத்

தடநிலைப் பெருந்தொழுவில் தகையேறு மரம்பாய்ந்து

  • வீங்குபிணிக் கயிறொரீஇத் தாங்குவனத் *தொன்றப் போய்க் கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப.

இது தரவு.

(பா. வே)* வீங்குமணிக் *தேறப்போய்க்