உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

20

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஆய்தமும் ஒற்றும் தாமாக அலகுபெறா. எனவே, வேறொரு எழுத்தோடு கூடிநின்ற பொழுது அலகு காரியம் பெறும் என்பதாயிற்று. என்னை? தேவதத்தன் தானாகப் போகலான் என்றால் துணைபெற்றால் போவான் என்பதாம். அதுபோலக் கொள்க" என உவமையால் நிறுவுகின்றார்.

வெண்பா முன்னாகவும் ஆசிரியம் பின்னாகவும் வருவது மருட்பா. அதனை விதப்பினால் அமைத்துக் கொண்டு, “கங்கை யமுனைகளது சங்கமம் போலவும் சங்கர நாராயணரது சட்டகக் கல்வியே போலவும், வெண்பாவும் ஆசிரியமுமாய் விராய்ப் புறநிலை வாழ்த்து முதலாகிய பொருட்கண்மேல் யாப்புற்று மருட்சி யுடைத்தாகப் பாவி நடத்தலின் மருட்பா என்று வழங்கப்படும்” என்பாரும் உளர் என்று விளக்குகின்றார்.

தூங்கிசை வண்ணம் முதலியவற்றை உவமையால் நயம்பட மொழிகின்றார்: "முதுபிடி நடந்தாற் போலவும், கோம்பி நடந்தாற் போலவும், நாரை நடந்தாற் போலவும் வரும். அவை ஒருபுடை ஒப்பினால் தூங்கிசை வண்ணம் எனக் கொள்க.

66

‘மதயானை நடந்தாற் போலவும், பாம்பு பணைத்தாற் போலவும், ஓங்கிப் பறக்கும் புட்போலவும் (ஏந்திசை வண்ணம்) வருமெனக் கொள்க.

“ஒவ்வா நிலத்திற் பண்டி உருண்டாற் போலவும், நாரை இரைத்தாற் போலவும், தாராவும் தார்மணி ஓசையும் போலவும் (அடுக்கிசை வண்ணம்) வரும்.

"பெருங் குதிரைப் பாய்த்தலும், ஒன்று கொட்டியும் இரண்டு கொட்டியும் முதலாக உடை அறுத்துக் கொட்டுப் போலவும் (பிரிந்திசை வண்ணம்) வரும்.

66

'நகரம் இரைந்தாற் போலவும், நாரை இசையும் ஆர்ப் பிசையும் இயமர இசையும் தேரைக் குரலும் போலவும் (மயங்கிசை வண்ணம்) வரும்.

66

‘சூறைக் காற்றும் நீர்ச்சுழியும் போல வருவது அகவல் வண்ணம். “நீரொழுக்கும் காற்றொழுக்கும் போல வருவது ஒழுகல் வண்ணம். “தோற்கயிறும் இரும்பும் திரித்தாற் போலவும், கன்மேற் கல் உருட்டினாற் போலவும் வருவது வல்லிசை வண்ணம்.

66

அன்ன நடையும் தன்னம் பறையும் போலவும்

மணன்மேல், நடந்தாற் போலவும் வருவது மெல்லிசை வண்ணம்”

இவ்வாறு தொடுத்து உவமைகளை மழையெனப் பொழி

கின்றார்.

(பக்: 412-415)