உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

21

‘எனப்படும்' என்னும் சொல்லுக்கு ‘என்று சிறப்பித்துச் சொல்லப்படும்' எனப் பொருள் கூறி, 'என’ என்னும் அது சிறப்பினைக் கூறுமோ?' எனின், கூறும்; என்னை?

"நளியிரு முந்நீர் ஏணியாக’

என்னும் புறப்பாட்டினுள்,

66

முரசு முழங்கு தானை மூவிருள்ளும் அரசெனப் படுவது நினதே பெரும

எனவும்,

66

99

ஆடுகழைக் கரும்பின் வெண்பூ நுடங்கும் நாடெனப் படுவது நினதே அத்தை”

எனவும் சிறப்புப் பற்றிப் புணர்த்தார் சான்றோர் ஆகலானும்,

“நாடெனப் படுவது சோழ நாடு” “ஊரெனப் படுவது உறையூர்”

என்று பரவை வழக்கினுள்ளும் சிறப்பித்துச் சொல்லுவார் ஆகலானும் எனக் கொள்க எனத் தாங்குறித்துக் கூறிய பொருளை இருவகை வழக்குகளாலும் நிறுவிக் காட்டுகின்றார். இவ்வாறே நேர் (233) இசை (234) ஒத்தாழிசை, (292,297) கொச்சகம் (292) சுரிதகம் (297) அம்போதரங்கம் (294) முதலாய் பல சொற்களை ஆய்ந்து எழுதுகின்றார்.

உரையாளராகிய இவர் பெரும் பாவலராகவும் திகழ்ந்தார் என்பது வெளிப்படை, ஒவ்வோர் இலக்கணமும், அல்லது ஒவ்வொரு பகுதி இலக்கணமும் விளக்கி முடித்துக் காட்டும் இடத்தில் சில பல வெண்பாக்களால் தொகுத்துக் கூறுகிறார். அதன் பின்னர் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க’ என்கிறார். இ வ்வெண்பாக்கள் இன்ன நூலின வென்றாதல், இவர் பாடியன வென்றாதல் குறிக்கப் பெற்றில. பிற நூல்களாலும் அறியப் பெற்றில. இவை இவ்வுரை யாசிரியராலேயே யாக்கப் பெற்றிருக்கக் கூடும். இவ்வாறு இவ்வுரை யகத்துக் காணப் பெறும் வெண்பாக்கள் நூற்றுக்கு மேலும் உள. பிற பாக்களும் அருகிக் காணப்பெறுகின்றன. ஒரு சில இடங்களில் காரிகைப் பாடல்களைக் காட்டி, 'இக் காரிகையை விரித்துரைத்துக் கொள்க' என்றும் வரும் குறிப்புகளால் இக் கருத்து வலியுறும்.