உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

"மிகப் பெரும்பாலான உதாரணப் பாடல்களை இவரே (விருத்தி யுரையாசிரியரே) செய்து அமைத்துக் கொண்டார் என்றும் கருதத் தோன்றுகின்றது. நூலில் சொல்லப்பட்டு இவரால் உரையில் விளக்கப் பெறுகிற அத்தனை இலக்கண விகற்பங்களுக்கும் பொருந்தக் கூடிய பாடல்கள் முன்னே தோன்றியிருந்தன என்பது நம்பக் கூடியதாய் இல்லை” என்றும்,

66

இணைமோனை (முதலிய) ஏழு விகற்பமும் வருவதற்குக் காட்டிய ‘அணிமலர் அசோகின் தளிர்நலம்' என்ற பாடலும், ணையெதுகை (முதலிய) ஏழுவிகற்பமும் வருவதற்குக் காட்டிய ‘பொன்னினன்ன பொறி சுணங்கு' என்ற பாடலும், உதாரணங்களாம். இவைபோலவே அறுபது வஞ்சியுரிச்சீரும் வந்த பாட்டு என்று 73 அடிகளையுடைய நீண்ட பாட்டொன்றைத் தருகிறார். இது 'நலஞ்செலத் தொலைந்த புலம்பொடு பழகி' எனத்தொடங்கி, 'கருங்கடல் நாடனொடு கலவா வூங்கே' என்று முடிகிறது. இதுவும் உரையாசிரியர் செய்து அமைத்த தென்றே கருதவேண்டும்; இல்லையானால் இவருக்கென்று வஞ்சியுரிச்சீர் எல்லாம் வருமாறு மற்றொருவர் ஒரு பாடல் பாடி அமைத்தல் நடைபெறுவதொன்றன்று. பலபாட்டுக்களைக் காட்டுவதற்குப் பதிலாக ஒரே பாடலில் காட்டலாம் என்று ஆசிரியரே செய்து காட்டியிருக்கிறார். தொடையோத்து உதாரணப்பாடல்கள் அனைத்துமே இத்தகையன” என்றும் கூறுவர் (தமிழ் இலக்கிய வரலாறு 11 ஆம். நூ.ஆ. திரு. மு அ; பக்: 142,149,150.)

ஆம்! 'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்' கூறுவது தொல்லாசிரியர் நெறி. பின்னாளில் இலக்கணத்திற்கு ஏற்ப இலக்கியம் படைக்கும் நிலை உருவாயிற்று. இலக்கியம் கிட்டாத இலக்கணத்தை வலியுறுத்த என் செய்வது? உரையாசிரியர் எடுத்துக் கொண்ட இலக்கணத்திற்கு ஏற்பத் தாமே இலக்கியம் படைத்துக் காட்டினார் என்று கோடல் பொருந்தும். ஆனால், அவற்றுள் அவர் செய்தவை எவை? அவர்க்கு முன்னிருந் தோர்க்கும் அதே இடர்ப்பாடு உண்டல்லவா! அவர் வழியாகக் கிடைத்த பாடல்கள் எவை? இவற்றைக் கண்டு தெளிவ தென்பது தெளிவற்றதும் இடர்ப்பாடு மிக்கதும் ஆகிய பணியாகும்.

விருத்தியுரைகாரர் இலக்கணச் சான்றுக்கு ஆசிரியர் பெயரையோ, நூற்பெயரையோ இயன்ற அளவும் தவறாமல் குறித்துச் செல்லும் நெறியை மேற்கொண்டுள்ளார். ஆனால், இலக்கியச் சான்றுக்கு அந்நெறியை மேற்கொண்டாரல்லர். ஆதலால், அவர் நூற்பெயரையோ ஆசிரியர் பெயரையோ குறிப்பிடாதன வெல்லாம் அவரே இயற்றியனவாகக் கோடற்கு