உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(இயற்பஃறாழிசைக் கொச்சகம்)

“தண்மதியோர் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங் குண்மதியும் உடனிறையும் உடன்றளர முன்னாட்கண் கண்மதியோர்ப் பிவையின்றிக் காரிகையின் நிறைகவர்ந்து பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ?”

து தரவு.

66

66

"இளநலம் இவள்வாட இரும்பொருட்குப் பிரிவாயேல், 'தளநல முகைவெண்பல் தாழ்குழல் தளர்வாளோ? ‘தகைநலம் இவள்வாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல், வகைநலம் இவள்வாடி வருந்தியில் இருப்பாளோ? 'அணிநலம் இவள்வாட அரும்பொருட்குப் பிரிவாயேல், மணிநலம் மகிழ்மேனி மாசோடு *மலிவாளோ? “நாம்பிரியோம் அணியென்று நறுநுதலைப் பிரிவாயேல், 2ஓம்பிரியோம் என்றநின் உயர்மொழியும் பழுதாமோ?

66

66

குன்றளித்த திரள்தோளாய் ! கொய்புனத்துக் கூடியநாள் அன்றளித்த அருண்மொழியால் அருளியது அருளாமோ? “சில்பகலும் ஊடியக்கால் சிலம்பொலிச்சீ றடிபரவிப்

பல்பகலும் ’தலையளித்த *பணிமொழியும் பழுதாமோ? இவை ஆறும் தாழிசை.

அதனால்,

இது தனிச்சொல்,

66

'அரும்பெறல் இவளினும் தரும்பொருள் அதனினும் பெரும்பெறல் அரியன ; வெறுக்கையும் அற்றே; விழுமிய தறிமதி அறிவாம்

4கழுமிய காதலில் தரும்பொருள் சிறிதே”

இது சுரிதகம்.

யா. கா. 32. மேற்.

இது சிறப்புடைத் தன்றளையால் நாலடித் தரவும், இரண்டடித் தாழிசை ஆறும், தனிச்சொல்லும், நாலடிச் சுரிதகமும் பெற்று வந்த இயற்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா.

குறைப்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா வந்த வழிக்

கண்டு கொள்க.

1.

முல்லையின் நன்முகைபோன்ற பல். 2. ஆம். 3. அருளிய. 4. நேர்ந்த காதலினும், நீ தேடச் செல்லும் பொருள் சிறிதாம்.

(பா.வே)*மடிவாளோ. *பனிமொழியும்.