உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(இயல் மயங்கிசைக் கொச்சகம்) “மணிகிளர் நெடுமுடி மாயவனும் 'தம்முனும்போன் றணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால் ; நுரைநிவந் தவையன்ன நொப்பறைய சிறையன்னம் இரைநயந் 'திறைகூறும் ஏமஞ்சார் துறைவ ! கேள்:

66

“வரையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக் கரையெனக் கடலெனக் கடிதுவந் திசைப்பினும், விழுமியோர் வெகுளிபோல் வேலாழி இறக்கில்லா தெழுமுந்நீர் பரந்தோங்கும் ஏமஞ்சார் துறைவ ! கேள்: இவை இரண்டும் தரவு.

“கொடிபுரையும் நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோள் தொடி நெகிழ்ந்த தோள்கண்டும் துறவலனே என்றியால்; கண்கவர் மணிப்பைம்பூண் கயில்கவைய சிறுபுறத்தோள் தெண்பனிநீர் உகக்கண்டும் தெரியலனே என்றியால்; “நீர்பூத்த நிரையிதழ்க்கண் நின்றொசிந்த புருவத்தோள் பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே என்றியால்;

66

'கனைவரல்யாற் றிடுகரைபோற் கைந்நில்லா துண்ணெகிழ்ந்து நினையுமென் நிலைகண்டும் நீங்கலனே என்றியால்;

“வீழ்சுடரில் நெய்யேபோல் விழுமநோய் பொறுக்கில்லா தாழுமென் நிலைகண்டும் அகல்கிலனே என்றியால்; “கலங்கவிழ்ந்த நாய்கன்போற் களைதுணை பிறிதின்றிப் புலம்புமென் நிலைகண்டும் போகலனே என்றியால். இவை யாறும் தாழிசை.

66

அதனால்,

இது தனிச்சொல்.

“அடும்பயில் *இறும்பிடை நெடும்பனை மிசைதொறும் கொடும்புற மடலிடை ஒடுங்கின 4குருகு ;

"செறிதரு செருவிடை எறிதொழில் இளையவர் நெறிதரு புரவியின் மறிதரும் 5திமில் ;

66

அரசுடை நிரைபடை விரைசெறி முரசென நுரைதரு திரையொடு கரைபொரும் கடல்;

1. பலராமன். 2. நொய்ப்பறைய

361

மெல்லிய இறகுடைய சிறகமைந்த அன்னம். 3. தங்கும். 4.

நாரை. 5. படகு. (பா. வே) *இறும்பி னெடும்பணை.