உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

அடக்கியல் இன்றி அடிநிமிர்ந் தொழுகியும், யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது கொச்சக ஒருபோ காகும் என்ப

371

பொ. 461.

என்றார் தொல்காப்பியனார். அவையெல்லாம் வந்தவழிக்

கண்டு கொள்க.

இவையெல்லாம்,

"மற்றும் விகற்பம் பலவாய் வருநவும் கொச்சகம் என்னும் குறியின ஆகும்”

என்பதனால் உரைத்துக்கொள்க.

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, கலிவெண்பா, தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிகைக் கொச்சகக் கலிப்பா என்னும் ஒன்பது கலிப்பாவும்;

வெள்ளைச் சுரிதக நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அகவற் சுரிதக நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அளவியல் அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, அளவழி அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா அளவியல் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, அளவழி வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, கலி வெண்பா, வெண் கலிப்பா, இயற்றரவு கொச்சகக் கலிப்பா, சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா, இயற்றரவினைக் கொச்சகக் கலிப்பா, சுரிதகத் தரவிணைக் கொச்சகக் கலிப்பா, இயற் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, குறைச்சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, இயற்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, குறைப் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, இயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, அயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என இவ்வாறு விகற்பிக்கப் பதினெட்டாம்.

அவை 'மூன்று துள்ளல் ஓசையானும் உறழ, ஐம்பத்து

நான்காம்.

பதினெட்டுக் கலியினையும், ஆசிரிய நேர்த்தளை இரண் டும் ஒழித்து, அல்லாத பன்னிரு தளையானும் கூறுபடுப்ப, இருநூற்று ஒருபத்தாறாம்; ஓசையும் தளையும் கூட்டி உறழ, அறுநூற்று நாற்பத்தெட்டாம். ஒத்தாழிசைக் கலிப்பா ஒழித்து, அல்லாக் கலியுள் ஆசிரிய நேர்த்தளை இரண்டும் அருகி வரப்பெறும் என அவற்றோடும் கூட்டி உரைக்குங்கால், எழு நூற்றிருபது கலிப்பாவாம்; பிற வகையாலும் விகற்பிக்கப் பலவுமாம். என்னை?

1. ஏந்திசைத் துள்ளல், அகவல் துள்ளல், பிரிந்திசைத் துள்ளல்.