உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

வரலாறு:

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(கலியொத்தாழிசை)

“கொய்தினை 'காத்தும் 'குளவி அடுக்கத்தெம்

66

பொய்தற் சிறுகுடி வாரல்நீ ஐய ! நலம்வேண்டின் ;

ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம்

ஆசில் சிறுகுடி வாரல்நீ ஐய ! நலம்வேண்டின்;

“மென்றினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக் குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய! நலம்வேண்டின்.

யா. கா. 33. மேற்.

இவை இரண்டடியாய், ஈற்றடி மிக்கு, ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வந்தமையால், கலியொத்தாழிசை எனப்படும்.

(சிறப்புடைக் கலித்தாழிசை)

“வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறியெம்

3கேள்வரும் போழ்தின் 4எழால்வாழி வெண்டிங்காள் ! கேள்வரும் போழ்தின் எழாதாய்க் 'குறாலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள் !”

யா. கா. 33. மேற்.

இஃது ஒரு பொருண்மேல் ஒன்றாய், ஈற்றடி மிக்கு, ஏனையடிதம்முள் ஒத்து வந்தமையால், சிறப்புடைக் கலித்தாழிசை எனப்படும்.

66

(சிறப்பில் கலித்தாழிசை)

"நிலமகள் கேள்வனும் நேர்கழலி னானும்

நலமிகு கச்சியார் கோவென்பவே;

நலமிகு கச்சியார் கோவாயி னானும்

சிலைமிகு தோட்சிங்கன் அவனென்பவே; செருவிடை யானை அவனென்பவே.’

எனவும்,

“பூண்ட பறையறையப் பூதம் மருள நீண்ட சடையான் ஆடுமே;

நீண்ட சடையான் ஆடும் என்ப

99

மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே” யா. கா. 33. மேற். எனவும் இவை ஒரு பொருண்மேல் ஒன்றாய், ஈற்றடி மிக்கு, இரண்டாமடி குறைந்து, ஏனையடி இரண்டும் ஒத்து வந்த சிறப்பில் கலித்தாழிசை.

1.

பிறவும் வந்த வழிக் கண்டுகொள்க.

காப்போம். 2. காட்டு மல்லிகையுள்ள மலைச்சாரல். 3. தலைவன். 4. எழாதே; வெளிப்படாதே. 5. பாம்பின் பல்) படாது இருக்கட்டும்.