உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

375

'கலியொத்தாழிசை, கலித்தாழிசை என்று வேறு படாதே அவற்றைக் கலித்தாழிசை என்று வழங்கவும் அமையும்.

இவற்றை எல்லாம் விகற்பித்துச், 'சிறப்புடைக் கலியொத் தாழிசை, சிறப்பில் கலியொத்தாழிசை, சிறப்புடைக் கலித் தாழிசை, சிறப்பில் கலித்தாழிசை, என்று கூறுபடுப்ப, நான்காம். அவை சிறப்புடைத் தளையானும், சிறப்பில் தளையானும் கூறுபடுத்து நோக்க, ஐம்பத்தாறாம். அவை எல்லாம் வந்தவழிக் கண்டு கொள்க.

66

அந்தடி மிக்குப் பலசில வாயடி தந்தமில் ஒன்றிய தாழிசை ஆகும்”

என்றார் காக்கைபாடினியார். “அந்த அடிமிக் கல்லா அடியே

தந்தமுள் ஒப்பன கலித்தா ழிசையே"

என்றார் சிறுகாக்கைபாடினியார். “ஈற்றடி மிக்கள வொத்தன வாகிப் பலவும் சிலவும் அடியாய் வரினே கலிப்பா இனத்துத் தாழிசை ஆகும்”

என்றார் அவிநயனார்.

66

அடிபல வாகியும் கடையடி சீர்மிகிற்

கடிவரை யில்லைக் கலித்தா ழிசையே”

- யா. கா. 33. மேற்.

என்றார் காமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர்.

கலித்துறை

அஅ. நெடிலடி நான்காய் நிகழ்வது கலித்துறை.

இஃது என் நுதலிற்றோ?' எனின், கலித்துறை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) ஐஞ்சீர் அடி நான்காய் நடப்பது கலித்துறை எனப்படும் என்றவாறு.

'நெடிலடி நான்காயது கலித்துறை’ என்னாது, ‘நிகழ்வது’ என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

அடிமறியாய் ஐஞ்சீர் நாலடியால் வருவனவற்றைக் 'கலி மண்டிலத்துறை' என்றும், அடி மறி ஆகாதே ஐஞ்சீர் நாலடியால் வருவனவற்றைக் ‘கலி நிலைத்துறை’ என்றும் வழங்கப்படும் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

அவை வருமாறு: