உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(கலி மண்டிலத் துறை)

“மிக்க மாதவம் வீட்டுல கடைதலை விளைக்கும்; தக்க தானங்கள் தணப்பரும் போகத்தைப் பிணிக்கும்; தொக்க சீலங்கள் ஏக்கமில் துறக்கத்தைப் பயக்கும்;

சிக்கென் பூசனை திகழொளிப் பிழம்பினைத் திருத்தும்”

இஃது அடிதோறும் பொருள் முடிந்து, அடி மறியாய், ஐஞ்சீர் அடியான் வந்தமையால், கலி மண்டிலத் துறை எனப்படும். (கலி நிலைத் துறை)

“யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித் தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான், தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளும் `கைதையும் எல்லாம் 'கரியன்றே?”

- யா. வி. 28. 95. மேற்.

யா. கா. 33. மேற்.

இஃது அடி மறி ஆகாதே ஐஞ்சீர் அடியான் வந்தமையால், கலி நிலைத்துறை எனப்படும்.

பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

இவை 3பதினாலு தளையாற் கூறுபடுத்து நோக்க, இருபத்தெட்டுத் துறையாம் போலும் எனக் கொள்க.

"ஐஞ்சீர் அடியின் அடித்தொகை நான்மையொ

டெஞ்சா *தியன்றன எல்லாம் கலித்துறை

என்றார் காக்கைபாடினியார்.

“ஐஞ்சீர் நான்கடி கலித்துறை ஆகும்"

என்றார் அவிநயனார்.

கலி விருத்தம்

அகூ. அளவடி நான்கின கலிவிருத் தம்மே.

யா. கா. 39. மேற்.

39.மேற்

இஃது என் நுதலிற்றோ?' எனின், கலி விருத்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) நாற்சீரால் ஆகிய நான்கடி உடையன எல்லாம் கலி விருத்தம் எனப்படும் என்றவாறு.

“அளவடி நான்கின கலிவிருத் தம்மே”

என்றவழி ஏகார விதப்பினால், அடிமறியாய், நாற்சீர் நாலடியால் வருவன கலி மண்டில விருத்தம் என்றும் ; அடிமறி ஆகாதே

1. தாழை. 2. சான்று. 3. ஏழு தளைகளையும் சிறப்புடைத்தளை சிறப்பில் தளை என்னும் இரண்டானும் முரணத் தளை பதினான்காம். (பா. வே) *மொழிந்தன.