உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

66

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

வழிபடும் தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ

99

வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே செவியறி வுறூஉவென அவையும் அன்ன என்றார் தொல்காப்பியனார் ஆகலானும், “புறநிலை வாயுறை செவியறி அவையடக் கெனவிவை வஞ்சி கலியவற் றியலா

என்றார் நல்லாறனார் ஆகலானும்.

- தொல். பொ. 422.

தொல். பொ. 423.

'அஃதே எனின், விளக்கத்தனார் பாடிய ‘கெடலரு மாமுனிவர்' (யா. வி. 83. மேற்) என்னும் கலிப்பா, புறநிலை வாழ்த்தாய் வந்தது பிற எனின், அஃது ஆசிரியச் சுரிதகத்தால் வந்தமையால், குற்றம் இன்று எனக் கொள்க.

1.

“திருக்கொண்டு பெருக்கம் எய்திவீற் றிருந்து

1

குற்றம் கெடுத்து விசும்பு தைவரக்

கொற்றக் குடையெடுப் பித்துநிலம் நெளியப் படைபரப்பி ஆங்காங்குக் களிறி யாத்து நாடுவளம் பெருகக் கிளைகுடி ஓம்பி நற்றாய் போல உற்றது பரிந்து

'நுகத்துக்குப் பகலாணி போலவும்

மக்கட்குக் கொப்பூழ் போலவும் உலகத்துக்கு மந்தரமே போலவும் நடுவு நின்று செங்கோல் ஒச்சி யாறில்வழி யாறு தோற்றியும் குளனில்வழிக் குளந் தொடு வித்தும்

3முயல்பாய்வழிக் கயல்பாயப் பண்ணியும்

களிறு பிளிற்றும்வழிப் பெற்றம்பிளிற்றக் கண்டும்

களிறூர் பலகாற் சென்றுதேன் தோயவும்

தண்புனற் படப்பைத் தாகியும்

“குழைகொண்டு கோழி எறிந்தும்

“நெடு நுகத்துப் பகல்போல, நடுவுநின்ற நன்னெஞ்சினோர்" என்பது பட்டினப்பாலை.

2. தோண்டச் செய்தும். 3. காடுகளைக் கழனியாக்கியது உரைத்தது. 4. செல்வவளம் உரைத்தது.