உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

"மனத்தது பாடும் மாண்பி னோரும் சினத்திற் கெடப்பாடும் செவ்வியோரும் முனிக்கணச் செய்யுள் மொழியவும் *பெறுப”

என்பது பாட்டியல் மரபு ஆகலின்.

வரலாறு:

"இலைநல வாயினும் எட்டி பழுத்தாற்

'குலைநல வாங்கனி கொண்டுண லாகா ;- விலையான் முலைநலம் *கண்டு முறுவலிக் கின்ற

வினையுடை நெஞ்சினை *வேதுகொ ளீரே’

397

99

- திருமந்திரம், 204.

இம்மூலர் வாக்கு மிக்கு வந்தவாறு கண்டுகொள்க.

66

“வச்சிரம் வாவி நிறைமதி முக்குடை

2நெற்றிநேர் வாங்கல் விலங்கறுத்தல் உட்சக் கரவடத் துட்புள்ளி என்பதே புட்கரனார் கண்ட புணர்ப்பு

இது மந்திர நூலுட் புட்கரனார் து

கண்ட எழுத்துக்குறி

வெண்பா. இஃது இரண்டாம் அடி குறைந்து வந்தது.

"கிடங்கிற் கிடங்கில்' என்னும் பொய்கையார் வாக்கு, (பக். 368) மிக்கு வந்தது.

66

3

“கறைப்பற் பெருமோட்டுக் காடு கிழவோட் 'கரைத்திருந்த சாந்துதொட் டப்பேய்

மறைக்குமா காணாது மற்றைத்தன் கையைக் குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு

து பூதத்தாரும் காரைக்காற்பேயாரும் பாடியது. இதுவும் இரண்டாம் அடி குறைந்து வந்தவாறு கண்டு கொள்க.

66

'அறிவுடை நம்பியார் செய்த செய்த ‘சிந்தம்’ ‘சிந்தம்” எப்பாற் படுமோ?" எனின், தூங்கல் ஓசைத்தாய்ச் சுரிதகத்தருகு தனிச் சொல் இன்றித் “தாழிரும் பிணர்த் தடக்கை' என்னும் வஞ்சிப்பாவே போல வந்தமையான்” தனிச்சொல் இல்லா இல்லா வஞ்சிப்பா

என்று வழங்காமோ?' எனின், வழங்காம்; செவியறிவுறூஉவாய் வஞ்சியடியால் வந்து பொருள் உறுப்பு அழிந்தமையால், ‘உறுப்பழி செய்யுள்' எனப்படும்; ‘புறநிலை வாழ்த்தும், வாயுறை வாழ்த்தும், அவையடக்கியலும், செவியறிவுறூஉம் என்னும் பொருண்மேற் கலியும் வஞ்சியுமாய் வரப்பெறா,’ என்றார் ஆகலின். என்னை?

1. ஐஞ்சீர் அடியாயிற்று. 2. முச்சீர் அடியாயிற்று. 3. காளி. 4. முச்சீர் அடியாயிற்று. (பா. வே) *பெறுமே. *கொண்டு. *வேறுகொ.