உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

403

என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும். 'அஃது' என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னையோ? எனின், நான்கு பாவின் அடி முதற் கண்ணும் சீர் கூனாய் வரப்பெறும், என்பாராயினும். வஞ்சியடியின் முதற் கண் அசை கூனாய் வருவதும், உகர ஈறாகிய நேரீற்று இயற்சீர் கூனாய் வருவ தும் சிறப்புடைய ; வஞ்சியடியின் இடையும் இறுதியும் அசை கூனாய் வருவதன்றிச் சீர் கூனாய் வாராது; ஆண்டு உகர ஈறாகிய நேரீற்று இயற்சீர் அருகிக் கூனாய் வரவும் பெறும்; அச்சிர், அல்லாப் பாவின் அடி முதற்கண் அருகி அல்லது கூனாய் வாராது; கொச்சகக் கலியுள் ஓரடி கூனாய் வருமாயினும், சிறப்பில்லை; வெண்பா, ஆசிரியம், கலி என்னும் இவற்றின் அடியுள் இடையும் இறுதியும் கூன் வரப் பெறாது என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

66

வரலாறு:

'அடி, அதர்சேர்தலின் அகஞ்சிவந்தன"

எனவும்,

1“மா எறிபதத்தான் இடங்காட்ட

புறநானூறு, 4.

எனவும் வஞ்சியடியின் முதற்கண் ‘அடி’ எனவும் ‘மா’ எனவும் அசை கூனாய் வந்தவாறு.

66

வேந்து, வேல்வாங்கிப் பிடித்துருத்தலின்’

எனவும்,

"தெருவு, தேரோடத் தேய்ந்தகன்றன

எனவும் வஞ்சியடியின் முதற்கண் உகர ஈறாகிய நேரீற்று இயற்சீர் கூனாய் வந்தவாறு.

வஞ்சியடி இறுதி அசை கூனாய் வந்தன மேற்காட்டின எனக் கொள்க.

66

வடாஅது,

பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅ

துருகெழு குமரியின் தெற்கும், குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும், குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும், கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின நீர்நிலை நிவப்பின் கீழும் மேல

புறநானூறு, 6.

என்னும் ஆசிரியத்துள், அடி முதற்கண் ‘வடாஅது’ உகரஈறாய

நேரீற்று இயற்சீர்க் கூன் அருகி வந்தது.

1. (பா. வே) மாவே.