உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

பிறவற்றுள்ளும் வந்தவழிக் கண்டுகொள்க.

வஞ்சி அல்லாப் பாக்கள் அடி இடையும் இறுதியும் கூன் வாராதவாறு மேற்காட்டியவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் கண்டு கொள்க.

66

(குறள் வெண்பா)

'அடிமுதற்கண் நான்கிற்கும் சீர்கூனாம் ; ஆகும் இடைகடையும் வஞ்சிக் கசை

என்றாரும் உளர்.

புறநடை

95. நிரல்நிறை முதலிய பொருள்கோட் பகுதியும் அறுவகைப் பட்ட சொல்லின் விகாரமும் எழுத்தல் இசையை அசைபெறுத் தியற்றலும் வழுக்கா மரபின் வகையுளி சேர்த்தலும் அம்மை முதலிய ஆயிரு நான்மையும் வண்ணமும் பிறவும் மரபுளி வழாமைத்

திண்ணிதின் நடாத்தல் தெள்ளியோர் கடனே.

இஃது என் நுதலிற்றோ?' எனின், மேற்சொல்லப்பட்ட செய்யுள்கட்கெல்லாம் எய்தியதோர் புறநடை இலக்கணம்

உணர்த்துதல் நுதலிற்று.

(2). இ.ள்) நிரல் நிறை முதலாகிய பொருள்கோளும், அறுவகைப்பட்ட சொல்லினது விகாரமும், எழுத்து அல்லாத கிளவியை அசைபெறுத்து இயற்றலும், வகையுளி சேர்த்தலும், அம்மை முதலாகிய எட்டு யாப்பலங்காரமும், வண்ணங்களும், மற்றொழிந்தனவும் வரலாற்று முறைமையோடும் பொருந்த நடாத்துதல் புலவர் கடன் என்றவாறு.

(க)

நிரல்நிறை முதலிய பொருள்கோட் பகுதியாவன: நிரல்நிறையும், சுண்ணமொழி மாற்றும், அடி மறி மொழி மாற்றும், அடி மொழி மாற்றும், பூட்டு விற்பொருள் கோளும், புனல் யாற்றுப் பொருள் கோளும், அளை மறி பாப்புப் பொருள்கோளும், தாப்பிசைப் பொருள்கோளும், கொண்டு கூட்டுப் பொருள்கோளும் என இவ்வொன்பதும் எனக் கொள்க.

அவற்றுள், (க) 'நிரல் நிறைப் பொருள்கோள் இரண்டு வகைப்படும்: பெயர் நிரல் நிறையும், வினை நிரல் நிறையும் என. 1. நிரல் நிறைப் பொருள்கோள், நிரல் நிறை அணி என அணி வகையுள்ளும் சாரும். “நிரல்நிறுத் தியற்றுதல் நிரல் நிறை அணியே தண்டி. 66.

99