உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

யாப்பருங்கலம்

அவற்றுள் பெயர் நிரல் நிறை வருமாறு:

(இன்னிசை வெண்பா)

“கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி மதிபவளம் முத்தம் முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள்”

எனவும்,

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“பொறையன் செழியன் பூந்தார் வளவன் கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை பாவை முத்தம் பல்லிதழ்க்* குவளை மாயோள் முறுவல் மழைப்பெருங் கண்ணே'

எனவும்,

6

66

(நேரிசை வெண்பா)

405

- நேமிநாதம், 92, மேற்.

'கடைசெப்பும் வேயும் கதிர்முலையும் தோளும்; இடைசெப்பின் ஏர்கொடி ; அன்னம் - நடைசெப்பின்; வண்டுவாழ் கூந்தலாள் 'வாயும் மடநோக்கும் தொண்டைமான் ஆறை மகட்கு”

எனவும்,

6

66

'வாக்கு முகந்தேன் மலர்க்கமலம் ; வண்குவளைப்

பூக்குரும்பை வேய்கண் புணர்முலைதோள்; நோக்கல்குல் மான்றேர் ; மயிந்தன் மணியருவி வேங்கடத்துத் தேன்றேர் குறவர் மகட்கு

எனவும்,

66

‘பூமாலை நீர்உறையுள் ; புள்ஏறு புள்கொடி;

வாய்மைவேல் ஆழி படைக்கலம் ;- நாமம்

பிரமன் இறைக்கண்ணன் ; பொன்தீக்கார் மேனி;

கருமம் படைப்பழிப்புக் காப்பு

எனவும் கொள்க. இனி எழுத்துமாறு நிரல் நிறை வருமாறு:

1.

66

'காமவிதி கண்முகம் ; மென்மருங்குல் செய்யவாய்

தோமில் துகடினி ; சொல்லமுதம் ;-தேமலர்க்

காந்தள் குரும்பை கனகம் மடவாள்கை ஏந்திளங் கொங்கை எழில்’

வாய், தொண்டை, நோக்கு. மான். (பா. வே) *மாயிதழ்க்.

- நேமிநாதம், 92, மேற்.