உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அரங்கம் அணிபொழிலா ஆடு மாயின்,

மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில்”

எனவும் வரும்.

- யா. வி. 52. 76. மேற்.

இனி ஒருசார் ஆசிரியர், நிறை எண் நிரல் நிறை குறை எண் நிரல் நிறை, மிகை எண் நிரல் நிறை என்று வேண்டு வோரும் உளர் எனக் கொள்க.

வரலாறு:

(கலி விருத்தம்)

66

சாந்தும் தண்டழை யுஞ்சுர மங்கையர்க்

கேந்தி நின்றன இம்'மலை ஆரமே;

வாய்ந்த பூம்படை யும்மலர்க் கண்ணியும்

ஏந்து சோகைய இம்மலை ஆரமே”

சூளாமணி, 752.

தனுள் இரண்டு பொருள் நிறுவிப் பின்னும் இரண்டு பொருள் நிறுவினமையால், நிறை எண் நிரல் நிறை.

(கலி நிலைத்துறை)

'யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித் தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லி பிரிவானேற் கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே?”

- யா. வி. 28. 88. மேற். -நேமிநாதம், 92. மேற்.

இதனுள் மூன்று பொருள் நிறுவி, ஒரு வழி இரண்டே நிறுவினமையால், குறை எண் நிரல் நிறை.

66

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

'ஆசை அல்குல் பெரியாரை அருளும் இடையும் சிறியாரைக் கூசு மொழியும் புருவமும் குடில மாகி இருப்பாரை

வாசக் குழலும் மலர்க்கண்ணும் மனமும் கரிய மடவாரைப் பூசல் பெருக்க வல்லாரைப் பொருந்தல் வாழி மடநெஞ்சே!”

நாரத சரிதை (புறத்திரட்டு, 1060)

தனுள் இரண்டு பொருள் நிறுவிப் பின் ஒரு வழி மூன்று பொருள் நிறுவினமையால், மிகை எண் நிரல் நிறை. பிறவும் அன்ன.

1. மலைச் சந்தன மரம். 2. கிளை. 3. வளமான தோட்டம். (பா.வே) *ஈய்ந்த.