உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

411

னி ஒருசார் ஆசிரியர், ஒரு முதல் நிரல் நிறை, இரு முதல் நிரல் நிறை, உய்த்துணர் நிரல் நிறை என்று வேண்டு வாரும் உளர்.

வரலாறு:

(நேரிசை வெண்பா)

"மீனாடு தண்டேறு வேதியர் ஆதியா

ஆனாத ஐந்தொன்பான் ஆயினவும் - தேனார்

விரைக்கமல வாண்முகத்தாய் ! வெள்ளை முதலா

உரைத்தனவும் இவ்வாறே ஒட்டு"

- யா. வி. 95. மேற்.

து முதல் நிறுத்த முறையானே முற்றும் நிறுவாது, முதல் ஒன்றே சொன்னமையால், ஒரு முதல் நிரல் நிறை.

“வெண்பா முதலாக வேதியர் ஆதியா

இஃது

மண்பால் வகுத்த வருணமாம் ;-ஒண்பா

இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல்

மனந்தட்பக் கற்றார் மகிழ்ந்து'

- யா. வி. 55 மேற்.

து இரு திறமும் முதலே சொன்னமையால், இரு முதல் நிரல் நிறை.

“செய்யோன் செழும்புகரோன் தெள்ளியோன் தேய்கதிரோன் வெய்யோன் புதன்வெளியோன் *வென்றிசேய் - பொய்யாப்பொன் செல்லாச் சனிகாரி தேவர்கோன் மந்திரியே

இல்காற் கிறைவரா வார்”

(கலி விருத்தம்)

“சேய்புகர் மால்மதி ஆளுமுன் னாளினைக் காய்கதிர் மால்பகர் சேயிடை *நாளினை மாசறு பொன்சனி காரிபொன் னாங்கடை ஆசறு நாள்களை அஞ்சக வூணே'

இது பன்னிரண்டு பொருள் நிறுவி, ஒழிந்தவற்றை ஆதியும் கடையும் கொள்ளாது ஓர் இராசிக்கும் காலுக்கும் இறைவர் என்று பேர் குறியாது சொன்னாராயினும், 'மேடம்' முதலாகிய இராசி என்று மேடத்தின் முதற்காலும் முதல் நாளின் முதற் காலும் என்று 'உய்த்துணர வைத்தமையால், உய்த்துணர் நிரல் நிறை.

அஞ்சகம் ஒரு நாளுக்கு நாலு காலாக ஒட்டிக்கொள்க.

1. ஆராய்ந்து அறியவைத்தல். (பா. வே) *வென்றிசெய். *தாளினை.