உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசை வெண்பா)

“பூமன் தெறுகதிரோன் பொன்காரி ஒண்புகரோன் வாமப் புதன்வெளியோன் மாமந்தன் - சோமன் சேய் சந்திரனே செவ்வாய் சதமகன்றன் மந்திரியே அந்திரையக் காணமாள் வார்'

66

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

ஆடா ரிவி லாதிநடு அந்தமுறை சேயிரவி அம்பொ னயிலும் தேடுசுற வேறுசனி வெள்ளிபுத னள்ளுமெறி தேள லவன்மீ னோடுமுயல் திங்களினொ டங்கிகுரு வுண்டலணர் தண்டு துலைநீர் மூடுகுட மோடுபுகர் காரிபுத னேரிதனை உண்ணு முறையே

இவையும் உய்த்துணர் நிரல் நிறை இவ்விரண்டும் திரையக் காணம். ஓர் இராசி மும்மூன்றாக ஒட்டிக்கொள்க.

இனி ஒருசார் ஆசிரியர், நிரல் நிறையைத் தொடைப் பாற்படுத்து, அடி நிரல் நிறை, இணை நிரல் நிறை, பொழிப்பு நிரல் நிறை, ஒரூஉ நிரல் நிறை, நிரல் நிறை, கூழை நிரல் நிறை, மேற்கதுவாய் நிரல் நிறை, கீழ்க்கதுவாய் நிரல் நிறை, முற்று நிரல் நிறை என்று வேண்டுவாரும் உளர் எனக் கொள்க.

வரலாறு:

(நேரிசை வெண்பா)

66

முலைகலிங்கம் மூரி நிலமா மகட்கு மலைபரவை ; மாரிமென் கூந்தல் ;-குலநதி தண்ணாரம் காஞ்சி தகைசால் முகமவட்குக் கண்ணாவான் ஏறுயர்த்த கோ’

எனவும்,

99

(குறள் வெண்பா)

“கொடிவடிவேல் கூட்டழிக்கும் கொவ்வைவாய் மாதர்

இடைநெடுங்கண் என்னும் உறுப்பு

99

எனவும் இவை அடிதோறும் முதற்சீர்க்கண்ணே நிரல் நிறுத் தமையான், அடி நிரல் நிறை.

66

(நேரிசை வெண்பா)

'நண்ணினர்க்கும் நண்ணார்க்கும் நாடோறும் கோடாமைத் தண்ணியராய் வெய்யராய்த் தக்காரோ-டெண்ணிக்

கருங்கடல்சூழ் மாநிலத்தைக் காப்பதாம் அன்றே

இருங்கழற்கால் வேந்தர்க் கியல்பு?”

6

எனவும்,