உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(கலி விருத்தம்)

எண்ணினர் எண்ணகக் படாத செய்கையான் அண்ணினர் அகன்றவர் திறத்தும் ஆணையான் நண்ணினர் பகைவரென் றிவர்க்கு நாடொறும் தண்ணியன் வெய்யனத் தானை வேந்தனே

413

சூளாமணி 52.

எனவும் வை முதல் இரு சீர்க்கண்ணும் நிரல் நிறுத் தமையால், இணை நிரல் நிறை.

66

(நேரிசை வெண்பா)

'புருவமும் பூணார் புணர்முலையும் கூறின்,

வரிசிலையும் மாண்பமைந்த கோங்கும் ; தெரியுங்கால்

நல்லிடை மெல்லியலார் நாட்டம் இவையிரண்டும்

வல்லி வசைதீர் மலர்”

இது முதற் சீர்க்கண்ணும் மூன்றாம் சீர்க்கண்ணும் நிரல் நிறுத்தமையால், பொழிப்பு நிரல் நிறை.

(இன்னிசை வெண்பா)

“புரிகுழலும் பூணாற் முலையாள் திருமுகமும் கொன்றையும் குன்றா தொளிசிறக்கும் திங்களும் என்றுரைப்பின் அல்ல தினிவே றுவமமற் றொன்றுரைக்க லாமோ ஒருங்கு?"

இது முதற் சீர்க்கண்ணும் நான்காம் சீர்க்கண்ணும் நிரல் நிறுத்தமையால், ஒரூஉ நிரல் நிறை.

“கண்ணும் புருவமும் மென்றோளும் இம்மூன்றும் வள்ளிதழும் வில்லும் விறல்வேயும் வெல்கிற்கும்; பல்லும் பகரும் மொழியும் இவையிரண்டும்

முல்லையும் யாழும் இகும்

- யா. வி. 48. மேற்.

து

து நான்காம் சீர் இன்றி முதல் மூன்று சீர்க்கண்ணும் நிரல் நிறுத்தமையால், கூழை நிரல் நிறை.

66

“பல்லும் பணிமொழியாள் வாயும் பணைமுலையும் முல்லையும் முந்நீர்ப் பவளமும் கோங்கரும்பும் நல்லிணர்க் கோதை நறுநுதலும் நாட்டமும் வில்லும் கயலும் இகும்”

இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் நிரல் நிறுத்தமையால், மேற்கதுவாய் நிரல் நிறை.